கோவையில் கஞ்சி காய்ச்சும் போராட்டம் - என்டிசி பஞ்சாலை முன்பு தொழிலாளர்கள் முழக்கம்!

கோவையில் என்.டி.சி பஞ்சாலைகளை மீண்டும் திறக்க வலியுறுத்தி, தொழிற்சங்கள் சார்பில் கஞ்சி காய்ச்சும் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இதேபோல், தமிழகத்தில் மொத்தமுள்ள 7 என்.டி.சி ஆலைகள் முன்பும் தொழிலாளர்கள் கஞ்சி காய்ச்சும் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர்.


கோவை: கொரோனா காலத்தில் அறிவிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக இந்தியா முழுவதும் இயக்கப்பட்டு வந்த என்டிசி ஆலைகள் மூடப்பட்டன.

இதனையடுத்து கொரோனா ஊரடங்கு தளர்த்தப்பட்ட போதிலும் என்டிசி பஞ்சாலைகள் முழுமையாக இயக்கப்படாமல் இருந்து வருகிறது. எனவே என்டிசி பஞ்சாலைகளை முழுமையாக இயக்கிட வலியுறுத்தி ஆலை தொழிலாளர்கள், பல்வேறு தொழிற்சங்க அமைப்புகள், மாவட்ட ஆட்சியர் அரசு அதிகாரிகளிடத்தில் மனு அளித்து வந்தனர், சில இடங்களில் போராட்டங்களையும் முன்னெடுத்தனர்.

இந்நிலையில். என்டிசி பஞ்சாலைகளை மீண்டும் இயக்கிட வலியுறுத்தி பஞ்சாலைத் தொழிலாளர்கள் கஞ்சி காய்ச்சும் போராட்டத்தை அறிவித்தனர். அதன்படி இன்று தமிழ்நாட்டில் உள்ள 7 என்டிசி பஞ்சாலைகளின் வாயில் முன்பும் கஞ்சி காய்ச்சும் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.



அதன் ஒரு பகுதியாக கோவை சாய்பாபா காலனி பகுதியில் உள்ள முருகன் மில் வாயிலின் முன்பு கஞ்சி காய்ச்சும் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதில் HMS, AITUC, MLF, ATP, CITU, உட்பட பல்வேறு அமைப்புகள் கலந்து கொண்டு கஞ்சி காய்ச்சி ஒன்றிய அரசிற்கு எதிராகவும் முடக்கப்பட்ட பஞ்சாலைகளை இயக்கிட வலியுறுத்தியும் முழக்கங்களை எழுப்பி வருகின்றனர்.



இந்தப் போராட்டத்தில், மூன்று ஆண்டுகளாக சட்டவிரோதமாக முடக்கப்பட்டுள்ள பஞ்சாலைகளை இயக்கிட வேண்டும், தொழிலாளர்களுக்கு கொடுக்கப்பட வேண்டிய சம்பளத்தை வழங்கிட வேண்டும், பணி ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு பணிக்கொடை வழங்கிட வேண்டும், முழு சம்பளம் கொடுத்து பென்சன் குறைபாட்டை சரி செய்ய வேண்டும், மூன்று ஆண்டு போனஸ் மற்றும் இதர பயன்களை வழங்கிட வேண்டும் ஆகிய கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டு வருகிறது.



இந்தப் போராட்டத்தில், HMS ராஜாமணி, AITUC ஆறுமுகம், உட்பட பலர் கலந்து கொண்டுள்ளனர்.

Newsletter

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...

கோவையில் நாளை முதல் கோமாரி தடுப்பூசி முகாம் தொடக்கம் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 10 வரை கால் மற்றும் வாய் (கோமாரி) நோய் தடுப்பூசி முகாம் நடைபெறும். அனைத்த...