48 மணிநேரத்தில் அண்ணாமலை மன்னிப்பு கேட்க வேண்டும்..! - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நோட்டீஸ்

திமுக அமைச்சர்களின் சொத்து பட்டியலை வெளியிட்ட பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில், தன் மீதான அவதூறான, உண்மைக்கு புறம்பான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளதாகவும், 48 மணி நேரத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


சென்னை: பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சார்பில் வழக்கறிஞர் வில்சன் அண்ணாமலைக்கு நோட்டீஸ் அளித்துள்ளார்.

திமுக.,வினரின் சொத்து பட்டியலை கடந்த வாரம் தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை வெளியிட்டார். அதில், திமுக.,வினர் குறித்து அவதூறு தெரிவித்ததாக திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தரப்பில் நோட்டீஸ் அளிக்கப்பட்டு, ரூ.500 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. இதனை அண்ணாமலை சட்டப்படி எதிர்கொள்ள தயார் எனக் கூறியிருந்தார்.

இந்த நிலையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தரப்பில் திமுக மூத்த வழக்கறிஞர் வில்சன், பாஜக தலைவர் அண்ணாமலைக்கு நோட்டீஸ் விடுத்துள்ளார். அதில், தன் மீதான அவதூறான, உண்மைக்கு புறம்பான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளதாகவும், 48 மணி நேரத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையெனில் ரூ.50 கோடி இழப்பீடு வழங்க உத்தரவிடக்கோரி வழக்கு தொடரப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி கோரி கோவை ஆட்சியர் அலுவலகத்தில் கருப்புத் துண்டுடன் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் தலையில் கருப்புத் துண்டு கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் வாக்குறுதி...

வடவள்ளி பகுதி தூய்மைப் பணியாளர்களுக்கு மாநகராட்சி ஆணையர் பாராட்டு

கோயம்புத்தூர் மேற்கு மண்டல வடவள்ளி பகுதியில் மக்கும், மக்காத குப்பைகளை சிறப்பாக தரம் பிரித்த தூய்மைப் பணியாளர்கள் மற்றும...

புளியகுளம் மாநகராட்சி பள்ளிகளில் கோவை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் புளியகுளம் பகுதியில் உள்ள வெரினாடா உயர்நிலைப் பள்ளி மற்றும் ஆரம்பப் பள்ளியில் மேயர் கா.ரங...

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் நாளை (01.08.2026) மின்தடை

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை ஆகஸ்ட் 1ம் தேதி காலை 9 மணி முதல் மாலை...

திருப்பூர் மாவட்ட அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 28.54 அடியாகவும், திருமூர்த்தி அணை 35.44 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்ட விவரம்

கோவை மாவட்டத்தில் உள்ள முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 30ஆம் தேதி நீர்மட்ட நிலவரம் வெளியா...