தமிழகத்தில் 76 லட்சம் குழந்தைகளுக்கு ரூபெல்லா ஊசி போடப்பட்டுள்ளதாக சுகாதார துறை தடுப்பு ஊசி பிரிவு துணை இயக்குநர் தகவல்


தமிழகத்தில் 76 லட்சம் குழந்தைகளுக்கு தட்டம்மை ரூபெல்லா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக சுகாதார துறை தடுப்பு ஊசி பிரிவு துணை இயக்குநர் தாமரை செல்வி தெரிவித்துள்ளார்.

கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய சுகாதார துறை தடுப்பு ஊசி பிரிவு துணை இயக்குநர் தாமரை செல்வி கூறுகையில், தமிழகத்தில் 9 மாதங்கள் முதல் 15 வயது வரையுள்ள 1 கோடியே 76 லட்சம் குழந்தைகளில், தற்போது வரை 76 லட்சம் குழந்தைகளுக்கு தட்டம்மை ரூபெல்லா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

மேலும், மீதமுள்ள குழந்தைகளுக்கு தடுப்பூசி போட வருகின்ற மார்ச் 1 முதல் 14 ம் தேதி வரை அனைத்து மாவட்டங்களிலும் ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

தட்டம்மை ரூபெல்லா தடுப்பூசி பாதுகாப்பானது, அதுகுறித்து பரப்பப்படும் வதந்திகளை நம்ப வேண்டாம். தொடர்ந்து, தட்டம்மை ரூபெல்லா தடுப்பூசி குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், பன்றிக் காய்ச்சல் பரவுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது" என தெரிவித்தார்.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...