கோவை சிறுமுகையில் பிடிப்பட்ட அரிய வகை நாகப்பாம்பு!

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே சிறுமுகையை சேர்ந்த ராஜ்குமார்(48) என்பவர் வீட்டின் உள்ள குடிநீர் தொட்டியில் மறைந்திருந்த 5 அடி நீளமுள்ள அரியவகை நாகப்பாம்பை, பாம்பு பிடி வீரர் காஜாமைதீன் லாவகமாக பிடித்து வனப்பகுதியில் விட்டார்.


கோவை: சிறுமுகையில் குடிநீர் தொட்டியில் பதுங்கியிருந்த அரியவகை நாகப்பாம்பை பாம்பு பிடி வீரர் பிடித்து வனப்பகுதியில் விட்டார்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள சிறுமுகை ரேயான்நகரை சேர்ந்தவர் ராஜ்குமார்(48). விவசாயியான இவரது வீட்டிற்கு அருகே உள்ள குடிநீர் தொட்டியில் கொடிய விஷமுடைய பாம்பு ஒன்று சுற்றித் திரிந்தது.

இது குறித்து பழத்தோட்டம் பகுதியைச் சேர்ந்த பாம்பு பிடி வீரரான காஜாமைதீனுக்கு தகவல் அளிக்கப்பட்டது. அவர் விரைந்து வந்து குடிநீர் தொட்டியிலிருந்த 5 அடி நீளமுள்ள அரிய வகை நாகப்பாம்பை லாவகமாக பிடித்தார்.

பின்னர் அந்தப் பாம்பினை சிறுமுகை வனத்துறையினர் அறிவுறுத்தலின்படி, வனப்பகுதியில் விட்டார். இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், பாம்பு பிடி வீரரால் பிடிபட்ட நாகம், அரியவகை பொறி நாகம். இது மிகவும் கொடிய விஷத்தன்மை கொண்டது, என்றனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...