கோவையில் 36 பேருக்கு பன்றி காய்ச்சல் பாதிப்பு


கோவையில் கடந்த சில வாரங்களாக பன்றிக்காய்ச்சல் பரவிவருகிறது. மேலும், ஈரோடு, திருப்பூர் மற்றும் நீலகிரி பகுதியில் மர்மகாய்ச்சல் மற்றும் பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டோர் கோவை அரசு மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில் கோவை சிகிச்சை பெற வந்தோர்களில் இதுவரை 36 பேருக்கு பன்றிக்காய்ச்சல் பாதிப்பு இருப்பதாக கோவை அரசு மருத்துவமனையின் இருப்பிட மருத்துவ சவுந்திர் வேலி தெரிவித்துள்ளார். 

இது குறித்து அவர் கூறியதாவது:-  

கோவை மட்டுமின்றி திருப்பூர் ,ஈரோடு ,நீலகிரி மாவட்டங்களை சேர்ந்த பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களும் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது தவிர தனியார் மருத்துவமனைகளிலும் ஏராளமானவர்கள் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.  மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சிலரும் தங்களுக்கு பன்றிக்காய்ச்சல் தொற்று இருக்கலாம் என்ற பீதியில் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கடந்த 3 மாதங்களில் மட்டும் 200க்கும் மேற்பட்டோர் பன்றி காய்ச்சல் பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்றுள்ளனர். மேலும், கோவை அரசு மருத்துவமனையில் பன்றிக்காய்ச்சல் அறிகுறிகளுடன்  36 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில்  8 பேருக்கு பன்றி காய்ச்சல் இருபது உறுதி செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள 28 பேரில் இரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பியுள்ளோம். அறிகுறிகள் இருந்தாலே அவர்களுக்கு சிகிச்சை அளிக்கபடுகிறது.

மேலும், அவர்களுக்கு தனி அறையில் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகிறோம். தற்போது டெங்கு காய்ச்சலுக்கு பாதிக்கப்ப்ட்டு 3 பேர் சிகிச்சைக்கை பெற்று வருகின்றனர். சாதாரண காய்ச்சலாக இருந்தாலும் உடனடியாக மக்கள் அரசு மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை பெற வேண்டும். முறையான சிகிச்சை பெறாமல் கடைசி நேரத்தில் அரசு மருத்துவமனைக்கு வருகின்றனர். உடனடி சிகிச்சை பெறாவிட்டால் உயிரிழப்பு நேரலாம். பன்றிக்காய்ச்சல் சிகிச்சைக்கு தேவையான போதிய அளவிலான மருந்து அரசு மருத்துவமனையில் உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...