ஈஷா யோகா மையத்தின் சட்ட விரோத கட்டிடங்கள் மீது நடவடிக்கை கோரி அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கம் ஆட்சியரிடம் மனு


ஈஷா யோகா மையத்தின் சட்ட விரோத கட்டிடங்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

இதுகுறித்து அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தின் கோவை மாவட்டக் குழு மாவட்டத் தலைவர் மு.ஆனந்தன் மற்றும் மாவட்டச் செயலாளர் வி.சுந்தரமூர்த்தி மாவட்ட ஆட்சியரிடம் அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:- 

கோவை மாவட்டம், பேரூர் வட்டம், இக்கரை போளுவாம்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள ஈஷா யோகா மையம் தற்போது முட்டத்துவயல் பகுதியில் 112 அடி உயரமுள்ள ஆதியோகி சிலையையும், பல்லாயிரம் சதுரடி பரப்பளவில் கட்டிடங்களையும், பூங்கா மற்றும் வாகன நிறுத்துமிடங்களையும் அரசு துறைகளின் அனுமதி பெறாமல் சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

ஈஷா யோகா மையம் அமைந்துள்ள போளுவாம்பட்டி வனச்சரகம் கோவை, திருப்பூர் மாவட்டங்களின் நீராதாரமான நொய்யலின் நீர்பிடிப்பு பகுதியாகும். இப்பகுதி தமிழக அரசின் திட்டம் மற்றும் வளர்ச்சித் துறை 22.4.1990 தேதியிட்ட அரசாணை எண் ஜிஓ. எம்எஸ். எண். 44/ 1990-யின் மூலம் மலைதள பாதுகாப்புக் குழுமத்தின் அதிகார வரம்பின் கீழ் உள்ளது.

இன்படி இக்குழுவின் அனுமதியின்றி விவசாய நிலங்களை வேறு பயன்பாட்டிற்கு மாற்றவோ, 300 சதுர மீட்டருக்கு மேல் எந்த கட்டிடங்களும் கட்டவோ கூடாது.

மேலும், மாவட்ட ஆட்சியர் மற்றும் வனம், வருவாய், நகர் ஊரமைப்புத் துறை, பொதுப்பணித் துறை, நீர்வள ஆதாரப் பிரிவு, மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், வேளாண் பொறியியல், மின்சாரம், தீயணைப்பு, காவல், நெடுஞ்சாலை, உள்ளாட்சி, கனிம வளம் ஆகிய துறைகளிடமிருந்து தடையின்மைச் சான்றுகள் பெற வேண்டும்.

இதேப் போன்ற நிபந்தனைகள் வீட்டுவசதி மற்றும் நகர் வளர்ச்சித் துறையின் 24.3.2003 தேதியிட்ட அரசாணை எண் ஜிஓ. எம்எஸ். எண் 49/2003 மூலம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு பஞ்சாயத்து கட்டுமான விதிகள் 1997 விதி 25 பொதுப்பயன்பாட்டு கட்டுமானங்களுக்கு பஞ்சாயத்து செயல் அதிகாரி, நகர் ஊரமைப்புத் துறையின் ஆலோசனை இல்லாமல் அனுமதியளிக்கக் கூடாது என்கிறது.

மேலும், விதி 4 (3) பொது வழிப்பாடு அல்லது மத பயன்பாட்டு கட்டிடங்களுக்கு மாவட்ட ஆட்சியரின் அனுமதி கட்டாயமாகும்.

ஆனால் ஈஷா யோகா மையத்தில் ஏற்கனவே உள்ள பல லட்சம் சதுரடி கட்டிடங்கள் மேற்சொன்ன எந்த அரசுத் துறைகளின் அனுமதியையும் பெறாத சட்டவிரோத கட்டிடங்கள் ஆகும். 

எனவே நகர் ஊரமைப்புத் துறை இயக்குநர் 5.11.2012 தேதியிட்ட ந.க.எண் 1866/2012/கோ.ம.4 ஆணையின் மூலம் சட்ட விரோத கட்டுமானப் பணிகள் நிறுத்த உத்தரவிட்டுள்ளார். ஆனால் அதனையும் மீறி இந்த சட்ட விரோத கட்டிடங்கள் கட்டி மடிக்கப்பட்டுள்ளதால் அதனை மூடி முத்திரையிடும் படி நகர் ஊரமைப்புத் துறை இயக்குநர் 21.12.2012 மற்றும் 26.11.2014 ஆகியதேதிகளில் உத்தரவு பிறப்பித்துள்ளார். ஆனால், இந்த உத்தரவு இதுநாள் வரை அமல்படுத்தப்படவில்லை.

இதேப் போன்று வனத்துறை, ஊராட்சி, மாவட்ட நிர்வாகத் தரப்பில் பலமுறை ஈஷா யோகா மையத்தில் விதிமுறைகளை மீறி கட்டப்படும் கட்டிடங்கள் குறித்தும், அதனை மூட உத்தரவிட்டும் ஈஷா யோகா மைய நிர்வாகத்தினர் அலட்சியப்படுத்தி வருகின்றனர். மேலும், தொடர்ந்து வனப் பகுதிகளை அழித்தும், வன உயிரினங்களுக்கு சேதங்கள் ஏற்படுத்தியும் வருகின்றனர்.

எனவே மாவட்ட ஆட்சியர் ஈஷா யோகா மையம் கட்டியுள்ள அனைத்து அரசு துறைகளின் அனுமதி பெறாத சட்ட விரோத கட்டிடங்களை இடிக்கவும், உரிய நடவடிக்கை எடுக்கும்படியும் அம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...