கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற மாநகராட்சி ஊழியர் உயிரிழப்பு

கோவை நரசீபுரத்தை சேர்ந்த மாநகராட்சி ஊழியர் சபரிநாதன் (23). கடந்த 3 நாட்களுக்கு பி.கே புதூரில் தனியாக நின்ற போது, மதுபோதையிலிருந்த கிறிஸ்டோபர், வினித் ஆகிய இருவரும் சபரிநாதனை கத்தியால் குத்தியதில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.


கோவை: கோவை அருகே போதை ஆசாமிகள் கத்தியால் குத்தியதில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மாநகராட்சி ஊழியர் சபரிநாதன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கோவை அடுத்த தொண்டாமுத்தூர் நரசீபுரத்தை சேர்ந்தவர் அமிர்தலிங்கம். இவரது மகன் சபரிநாதன் (23). இவர் கோவை மாநகராட்சி தெற்கில் குடிநீர் திறப்பாளராக பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன் நள்ளிரவு 12.30 மணியளவில் அவர் குனியமுத்தூர் பி.கே புதூரில் உள்ள மதுரை வீரன் கோவில் அருகில் நின்று கொண்டு இருந்தார்.

அப்போது அங்கு வந்த பி.கே.புதூர் பகுதியை சேர்ந்த கிறிஸ்டோபர், வினித் ஆகிய இரண்டு இளைஞர்கள் மது போதையில் சபரிநாதனை கத்தியால் குத்திவிட்டு தப்பிச் சென்றனர். இதில் பலத்த காயமடைந்த சபரிநாதனை உறவினர்கள் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் பதுங்கியிருந்த கிருஸ்டோபர் மற்றும் வினீத்தை போலீசார் கைது செய்து அவர்கள் மீது கொலை முயற்சி வழக்காக பதிவு செய்தனர்.

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த சபரிநாதன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து கொலை முயற்சி வழக்கு, கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது.

Newsletter

கே.ஜி.சாவடி பகுதியில் நாளை (15.07.2026) மின்தடை: மாதாந்திர பராமரிப்பு பணிகள்

மதுக்கரை தாலுக்கா கே.ஜி.சாவடி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை...

கீரணத்தம் பகுதியில் நாளை (15.07.2026) 8 மணி நேரம் மின்தடை

கீரணத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜூலை 15) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை...

விலாங்குறிச்சியில் நாளை (15.07.2026) மின் பராமரிப்பு பணி - 8 மணி நேரம் மின்தடை

விலாங்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தண்ண...

சைபர் கிரைம்: ஆன்லைனில் ஆபாச வீடியோ பார்த்ததாக மிரட்டி லட்சக்கணக்கில் மோசடி: 2 பேர் கைது

ஆபாச வீடியோ பார்த்ததாக கூறி போலீஸ் அதிகாரிகள் என மிரட்டி, வடமாநில வியாபாரிகளிடம் ஆன்லைன் மூலம் பணம் பறித்த வழக்கில் இருவ...

பருவத் தேர்வு கட்டணம் செலுத்தியும் அபராதம்: பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு எதிராக தொலைதூரக் கல்வி மாணவர்கள் குற்றச்சாட்டு

பருவத் தேர்வுக்கான கட்டணத்தை காலக்கெடுவுக்குள் செலுத்தியிருந்தும், தொழில்நுட்பக் கோளாறால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ப...

வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் கோவை விமான நிலையம் வந்தடைந்தன

வியட்நாம் படகு கவிழ்ப்பு விபத்தில் உயிரிழந்த 6 தமிழர்களில், திருச்சியைச் சேர்ந்த 3 பேரின் உடல்கள் கோவை சர்வதேச விமான நி...