கோவையில் பேசமறுத்த இளம்பெண்ணை கத்தியால் தாக்கிய கல்லூரி மாணவர் மீது வழக்குப்பதிவு!

கோவை சுந்தராபுரம் அருகே தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த இளம்பெண் பேச மறுத்ததால், அவருடன் கல்லூரியில் படித்த ஸ்ரீராம் என்ற இளைஞர் கத்தியால் தாக்கிவிட்டு தப்பிச்சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


கோவை: கோவை மாவட்ட சுந்தராபுரம் அருகே பேச மறுத்த இளம்பெண்ணை இளைஞர் ஒருவர் கத்தியால் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோவை பிள்ளையார்புரம் கஸ்தூரி கார்டன் பகுதியை சேர்ந்தவர் ஷானவாஸ். இவரது மகள் ரேஷ்மா (20). தனியார் கல்லூரியில் 2 ஆண்டுகள் படித்துள்ளார், மேலும் படிப்பை நிறுத்தி விட்டு சுந்தராபுரம் பகுதியில் உள்ள தனியார் டிராவல்ஸ் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.

இவர் கல்லூரியில் படித்த போது, அவரது வகுப்பில் படித்து வந்த குனியமுத்தூர் விநாயகர் வீதியை சேர்ந்த ஸ்ரீராம் (20) என்ற இளைஞரை காதலித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், ரேஷ்மா கல்லூரி படிப்பை நிறுத்தியதில் இருந்து சுமார் 10 மாதங்களாக ஸ்ரீராமிடம் பேசாமல் இருந்து வந்ததாக தெரிகிறது.

இன்று வழக்கம்போல் ரேஷ்மா சுந்தராபுரம் டிராவல்ஸ் அலுவலகத்தில் பணியில் இருந்த போது திடீரென அங்கு வந்த ஸ்ரீராம், அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு, தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அவரது முகத்தில் வெட்டியதாக கூறப்படுகிறது.

அப்போது அவரது சத்தம் கேட்டு அங்கிருந்தவர்கள் ஓடி வருவதை கண்ட ஸ்ரீராம் அங்கிருந்து தப்பிச் சென்றார். சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த போத்தனூர் போலீசார் இளம்பெண்ணை மீட்டு அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

இதனை தொடர்ந்து, சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், அங்குள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை வைத்து தப்பிச்சென்ற கல்லூரி மாணவர் ஸ்ரீராமை தேடி வருகின்றனர்.

சம்பவ நடந்த இடத்திற்கு 10 மீட்டர் தொலைவிலேயே போத்தனூர் போலீசாரின் கட்டுப்பாட்டு அறையும், போக்குவரத்தை சீர் செய்ய காவலர்களும் இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

Newsletter

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...

சூலூரில் மயக்க மருந்து கொடுத்து பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை; ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவை மாவட்டம் சூலூரில் 33 வயது பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த பானம் கொடுத்து இருவர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகக...