உடுமலை அருகே இறந்த சலங்கை மாட்டிற்கு பூஜை செய்து வழிப்பட்ட மக்கள்

உடுமலை அருகே லிங்கம்மாவூரில் சலங்கை மாடு இறந்தது. இதனைத் தொடர்ந்து பொதுமக்கள் சலங்கை மாட்டிற்கு பூஜை செய்து வழிபாடு செய்து, ஊருக்கு பொதுவான கோவில் அருகே அடக்கம் செய்யப்பட்டது.


திருப்பூர்: உடுமலை அருகே இறந்த சலங்கை மாட்டுக்கு பூஜை செய்து பொதுமக்கள் அடக்கம் செய்தனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த குடிமங்கலம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பொங்கல் அன்று பிறந்த கன்றுகளை சோமவாரபட்டியில் உள்ள ஆல்கொண்டமால் கோவிலுக்கு நேர்த்தி கடனாக செலுத்துகின்றனர்.

காளை கன்றுகளை தேர்வு செய்து தெய்வமாக கருதி ஊர் மக்கள் வளர்க்கின்றனர். சலங்கை மாடுகளுக்கு இசைக்கு ஏற்ப ஆடும் வகையில் பயிற்சி அளிக்கப்படுகிறது.

கிராமப்புறங்களில் உள்ள இளைஞர்கள் கைகளில் கம்புகளை உயர்த்திப் பிடித்துக் கொண்டு காலில் சலங்கை கட்டிக்கொண்டு உருமி இசைக்கு ஏற்ப மாடுகளுக்கு முன்னால் சென்று ஆடுகின்றனர். மாடுகளும் இசைக்கேற்ப தலையை ஆட்டி ஆடுகின்றன.

தமிழ்நாட்டின் சில பகுதிகளில் பாரம்பரிய நடனமாக இது நடைபெற்று வருகிறது. மாட்டுப்பொங்கலன்று சலங்கை மாடுகளுக்கு பூஜை செய்து வழிபாடு செய்வது வழக்கம்.



கொங்கல் நகரம் அருகே உள்ள லிங்கம்மாவூரில் சலங்கை மாடு இறந்தது. இதனைத் தொடர்ந்து பொதுமக்கள் சலங்கை மாட்டிற்கு பூஜை செய்து வழிபாடு செய்தனர். இளைஞர்கள் உருமி இசைக்கேற்ப தேவர் ஆட்டம் ஆடினர். அதனைத் தொடர்ந்து மாடு ஊருக்கு பொதுவான கோவிலில் அருகே அடக்கம் செய்யப்பட்டது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...