குழந்தை தொழிலாளர் முறையை ஒழிக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்..! – கோவை ஆட்சியர் வலியுறுத்தல்!

கோவை நவஇந்தியாவில் உள்ள கல்லூரியில் நடைபெற்ற குழந்தை மற்றும் வளரிளம் பருவத் தொழிலாளர் முறை ஒழிப்பு பயிலரங்கத்தில் பேசிய மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி, குழந்தை தொழிலாளர் முறையை ஒழிக்க பள்ளிகளில் வருகையினை கண்காணிக்க வேண்டும் என்றார்.


கோவை: குழந்தை தொழிலாளர் மற்றும் வளரிளம் பருவத் தொழிலாளர் முறையை ஒழிக்க பள்ளிகளில் மாணவர் வருகையை கண்காணிக்க வேண்டும் என கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்டம் நவஇந்தியா எஸ்.என்.ஆர். கல்லூரியில் இன்று தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை சார்பில் குழந்தை மற்றும் வளரிளம் பருவத் தொழிலாளர் முறை ஒழிப்பு தொடர்பான கோவை மண்டல அளவிலான பயிலரங்கம் மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் பாடி தலைமையில் நடைபெற்றது.



இந்த கருத்தரங்கில் தமிழ்நாடு நீதித்துறை பயிலக துணை இயக்குநர் ரிஷிரோஷன், தொழிலாளர் நலத்துறை கூடுதல் ஆணையர் தமிழரசி, இணை ஆணையர் லீலாவதி, தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம் துணை இயக்குநர் கலைமதி, தேசிய குழந்தை தொழிலாளர் திட்ட திட்ட இயக்குநர் விஜயகுமார், தமிழ்நாடு கூட்டணி நிறுவன உறுப்பினர் பாலமுருகன் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இந்த கருத்தரங்கில் மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி பேசியதாவது, குழந்தை தொழிலாளர் (ஒழிப்பு மற்றும் முறைப்படுத்துதல்) சட்டம் 1966 ன்படி 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளை எவ்விதமான தொழிலிலும் ஈடுப்படுத்த கூடாது, 18 வயதுக்குட்பட்ட வளரிளம் பருவத்தினரை அபாயகரமான தொழிலில் ஈடுப்படுத்த கூடாது. குழந்தை தொழிலாளர்கள் மற்றும் வளரிளம் பருவத்தினரை பணிக்கு அமர்த்தும் நிறுவனத்தின் மீது குறைந்தபட்சம் 20,000 முதல் அதிகபட்சம் 50,000 வரை அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

பள்ளி கல்லூரிகளில் மாணக்கர்களின் சேர்க்கை அதிகமாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. 2016 சட்ட திருத்திற்கு பிறகு குழந்தை தொழிலாளர் முறை கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது. இம்முறையை ஒழிக்க பள்ளிகளில் வருகையினை கண்காணிக்க வேண்டும். தொடர்ச்சியாக பள்ளிக்கு வராமல் இருக்கும் குழந்தைகளின் விவரங்களை சேகரித்து, ஒருவேளை அவர்கள் ஏதாவது தொழிற்சாலைகளில் வேலை செய்து வந்தால், அவர்களை மீட்டு, அரசின் திட்டங்கள் மூலம் வாழ்வாதார பாதுகாப்பு அளிப்பதுடன், தொடர் கல்வி வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அரசு திட்டங்கள் குறித்து பெற்றோருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். குடும்ப சூழ்நிலை காரணமாக மட்டுமின்றி ஒரு சில இடங்களில் கட்டாயப்படுத்தி குழந்தைகளை தொழிலாளராக பணி அமர்த்துவார்கள். இது குறித்து தகவல் அறிந்துவுடன், மிக கவனமாக செயல்பட்டு அந்த குழந்தைகளை மீட்க வேண்டும்.

குழந்தை தொழிலாளர் முறை மிகவும் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது. இருந்தபோதிலும் முற்றிலும் ஒழிக்கும் வகையில் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். குழந்தை தொழிலாளர் தொடர்பான புகார்களை Pencil portal என்ற வலைதளத்திலும், கட்டணமில்லா தொலைபேசி எண் 1098 என்ற எண்ணிலும் தெரிவிக்கலாம்.

இவ்வாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

Newsletter

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...