குடும்ப தலைவிகளுக்கு நிலுவை தொகை ரூ.28 ஆயிரத்தையும் வழங்குக..! - பாஜக தலைவர் அண்ணாமலை வலியுறுத்தல்!

குடும்பத்தலைவிகளுக்கு ரூ.1,000 வரும் செப்டம்பர் மாதம் முதல் வழங்கப்படும் என்று, தமிழக அரசு பட்ஜெட்டில் அறிவித்ததை தொடர்ந்து, நிலுவை தொகையாக ரூ.28,000யும் சேர்த்து ரூ.29,000 ஆக வழங்க வேண்டும் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.


சென்னை: குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் உரிமைத் தொகை ரூ.1,000 வழங்கும்போது நிலுவை தொகை ரூ.28,000 சேர்த்து வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் இன்று 2023-2024 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கையை நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். அதன்படி இன்று சட்டசபையில் 145 அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. இதில் அனைவராலும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட முக்கியமான அறிவிப்பு என்றால் அது, குடும்ப தலைவிகளுக்கு ரூ.1,000 உரிமை தொகை வழங்கும் அறிவிப்பு தான்.

இந்த நிலையில் தகுதி வாய்ந்த குடும்ப தலைவிகளுக்கு மட்டுமே உரிமை தொகை வழங்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த ரூ.1000 உரிமைத் தொகை வரும் செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி முதல் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்காக 7,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இன்னும் 6 மாதங்களில் இந்த திட்டத்திற்கான பயனாளிகள் தேர்வு செய்யப்படுவர். சில விதிமுறைகளை வைத்து அதற்குள் வரும் குடும்பத் தலைவிகளுக்கு மட்டுமே இந்த ரூ.1,000 கிடைக்கும் என தெரிகிறது. இதற்கு எதிர்க்கட்சிகள் ஆட்சேபம் தெரிவித்துள்ளன.

இதுகுறித்து பாஜக தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில், ஆட்சிக்கு வந்து 2 ஆண்டுகளுக்கு பிறகு, 'மகளிருக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்' என்ற தேர்தல் வாக்குறுதி திமுகவுக்கு ஞாபகம் வந்ததில் மகிழ்ச்சி.

வரும் செப்டம்பர் மாதம் இந்த தொகை வழங்கப்படும் போது, முதல் தவணையில் இதுவரையிலான 28 மாத நிலுவைத் தொகையுடன் சேர்த்து, 29000 ரூபாயாக வழங்க வேண்டும் என திமுக அரசை வலியுறுத்துகிறேன்.

அதோடு தகுதியுடைய மகளிருக்கே ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று மடைமாற்றாமல், தமிழகத்தில் உள்ள 2.2 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என்றும் தமிழக பாஜக சார்பாக வலியுறுத்துவதாக குறிப்பிட்டுள்ளார்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...