‘ஸ்கேனர் ஆபரேட்டர்’ நியமனத்தில் தாமதம் - கோவை ஏர்போர்ட்டில் ரூ.30 லட்சம் வருவாய் இழப்பு!

கோவை விமான நிலைய சரக்கக அலுவலகத்தில் ‘ஸ்கேனர் ஆபரேட்டர்’ பணிக்கு ஊழியர்கள் நியமனம் செய்வதில் காலதாமதம் காரணமாக, கடந்த இரண்டு மாதங்களாக உள்நாட்டு சரக்கு போக்குவரத்து பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால், கடந்த 2 மாதங்களில் ரூ.30 லட்சம் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.


கோவை: கோவை பீளமேடு விமான நிலைய வளாகத்தில் ஒருங்கிணைந்த சரக்கக வளாகம் அமைந்துள்ளது. உள்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும், வெளிநாடுகளுக்கும் அனுப்பப்படும் சரக்குகள் இங்கு கையாளப்படுகின்றன. சேவை இல்லாத வெளிநாடுகளுக்கு ‘பாண்டட் டிரக்’ என்ற சேவை மூலம் கோவை விமான நிலையத்தில் இருந்து சரக்குகள் அனுபப்படுகின்றன.



மாதந்தோறும் சராசரியாக உள்நாட்டு போக்குவரத்து பிரிவில் 700 டன் மற்றும் வெளிநாட்டு போக்குவரத்து பிரவில் 150 டன் வீதம் 850 டன் எடையிலான சரக்குகள் கையாளப்பட்டு வந்தன. இந்நிலையில், ஸ்கேனர் ஆபரேட்டர் தொடர்பாக விமான நிலைய ஆணையகம் வெளியிட்ட புதிய விதிமுறையால் பணியாளர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் கோவையில் இருந்து சரக்குகள் அனுப்பும் பணியும் பாதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கோவை விமான நிலைய அதிகாரிகள் கூறியதாவது:

உள்நாட்டு பிரிவில் கோவையில் இருந்து பல்வறு நகரங்களுக்கு அனுப்பப்படும் சரக்குகள் ஸ்கேனர் ஆபரேட்டர்கள் மூலம் சரிபார்க்கப்பட்டு அனுமதி அளித்தபின் விமானங்களில் ஏற்றிச் செல்லப்படும். இதுவரை விமான நிறுவனங்களே ஊழியர்களை நியமித்துக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டு வந்த நிலையில், இந்திய விமான நிலைய ஆணையகம்(ஏஏஐ) கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் புதிய விதிமுறையை அறிவித்தது.

அதன்படி, விமான நிலைய ஆணையகம் சார்பில் ஸ்கேனிங் ஆபரேட்டர்கள் நியமிக்கப்பட வேண்டும். புதிய விதிமுறையால் கோவை உள்பட நாடு முழுவதும் 13 விமான நிலையங்களில் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் சென்னையில் ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். திருச்சியில் உள்நாட்டு சரக்கு போக்குவரத்து கையாளப்படுவது இல்லை. மதுரையில் பிரச்சினை இருந்தது. சமீபத்தில் ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கோவையில் அதற்கென பிரத்யேக பயிற்சி பெற்ற ஊழியர்கள் இல்லை. இதனால் காலதாமதம் ஏற்படுகிறது. கடந்த இரண்டு மாதங்களாக நிலவும் இப்பிரச்சினையால் கடந்த இரு மாதங்களில் தலா 350 டன் என மொத்தம் 700 டன் எடையிலான சரக்குகள் வேறு விமான நிலையங்கள் மூலம் அனுப்பப்பட்டுள்ளன. இதனால், ரூ.30 லட்சம் வரை வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. குறைந்தபட்சம் ஐந்து ஊழியர்கள் தேவைப்படுகின்றனர்.இது தொடர்பாக விமான நிலைய ஆணையக தலைமையகத்திடம் தெரிவித்துள்ளோம். இந்த மாத இறுதிக்குள் ஸ்கேனிங் ஆபரேட்டர்கள் நியமிக்கப்பட வாய்ப்பு உள்ளது.

இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

Newsletter

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...