வனவிலங்குகள் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய மேட்டுப்பாளையத்தில் 7 இடங்களில் தண்ணீர் தொட்டி!

மேட்டுப்பளையம் வனப்பகுதியில் வறட்சி தொடங்கியதால், வனவிலங்குகளின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்யும் விதமாக 7 இடங்களில் தண்ணீர் தொட்டி அமைக்கப்பட்டுள்ளதால், வனவிலங்குகள் வெளியேறுவது தடுக்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.


கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே வனவிலங்குகள் தண்ணீர் குடிக்க வசதியாக 7 இடங்களில் தண்ணீர் தொட்டிகள் அமைக்கப்பட்டு உள்ளது.

மேட்டுப்பாளையம் வனப்பகுதியானது, 10,000 ஹெக்டர் பரப்பளவு கொண்ட மிக நீண்ட வனப்பகுதியாகும்.

இந்த வனப்பகுதியில் சிறுத்தை, புலி, காட்டு யானை, காட்டெருமை, செந்நாய், கரடி என ஏராளமான பாதுகாக்கப்பட்ட வன உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன.

இந்தநிலையில் கோடைக்காலம் நெருங்கி வரும் சூழலில் தற்போது மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் வறட்சி தொடங்கியுள்ளது. இதன் காரணமாக வனப்பகுதி முழுவதும் அதன் தாக்கம் அதிகரிக்க தொடங்கி உள்ளது.

இதனால் வனத்தில் உள்ள மரங்கள், செடி, கொடிகள் காய்ந்து வருவதால் வன உயிரினங்கள் உணவு மற்றும் தண்ணீர் தேவைகளுக்காக வனப்பகுதியில் இருந்து வெளியேறும் சூழல் உருவாகியுள்ளது.

குறிப்பாக மேட்டுப்பாளையத்தில் உள்ள ஜக்கனாரி, கன்டியூர், உலிக்கல் போன்ற வனப்பகுதியில் காட்டு யானைகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டு வரும் நிலையில், அவற்றின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய தற்போது வனத்துறையினர் மிக தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

அதன்படி ஏற்கனவே மேட்டுப்பாளையம் வனச்சரகத்திற்கு உட்பட்ட அடர் வனப்பகுதியில் உள்ள செயற்கை தண்ணீர் தொட்டிகளை மேம்படுத்தும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன்படி, நடப்பு பருவத்தில் மட்டும் வனவிலங்குகளின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்யும் விதமாக அடர் வனத்தில் 7 இடங்களில் தண்ணீர் தொட்டிகள் புதியதாக அமைத்து வருகின்றனர்.

ஜக்கனாரி காப்பு காட்டில் ரூ.13 லட்சம் செலவில் போர்வெல் அமைத்து சோலார் மூலம் இயங்கும் மோட்டார்களை பொருத்தி தண்ணீர் தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும் பணியினை மேற்கொண்டு வருகின்றனர்.

ஏற்கனவே உள்ள கசிவு நீர் குட்டைகளில் வறட்சி காரணமாக தண்ணீர் வற்றி வரும் நிலையில் தற்போதைய தண்ணீர் இருப்பு குறித்து ஆய்வு மேற்கொண்டு வரும் வனத்துறையினர் தேவைப்பட்டால் லாரிகள் மூலம் தண்ணீர் நிரப்ப உள்ளதாகவும் தெரிவித்தனர்.

இதன் மூலம் வனவிலங்குகளின் தண்ணீர் தேவை அடர் வனத்திலேயே பூர்த்தி செய்யபட்டு வன உயிரினங்கள் வனத்தில் இருந்து வெளியேறுவது தடுக்கப்படும் என வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலநிலைக்கேற்ற வேளாண்மை குறித்த சர்வதேச மாநாடு தொடக்கம்

Coimbatore மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "எதிர்கால வேளாண்மை: காலநிலைக்கேற்ற மற்றும் மீள்திறன்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் நடைபெற்ற சாலை அமைப்பு மற்றும் தூய்மை பணிகள்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் புதிய தார் சாலை அமைப்பு, மாஸ் கிளீனிங், சுகாதார மைய ஆய்வு மற்றும் பள்ளி பகுதி...

கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கான வருடாந்திர மருத்துவ முகாம் தொடக்கம்

கோவை மாநகராட்சி சீத்தாலட்சுமி நகர்ப்புற முதன்மை சுகாதார நிலையத்தில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்...

சிங்காநல்லூரில் அனுமதியின்றி விளம்பர சுவரொட்டி ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.5,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 61 சிங்காநல்லூர் பகுதியில் தனியார் வணிக வளாகத்தின் விளம்பர சுவரொட்டிகள்...

கோவையில் ஒரே நாளில் 400 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோவை மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து செல்வபுரம், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், இருகூர் பகுதிகளில்...

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில் தடுப்புச் சுவரில் மோதி கார் விபத்து; தனியார் நிறுவன ஊழியர் உயிரிழப்பு

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில், கட்டுப்பாட்டை இழந்த கார் மேம்பால தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில், கோவையைச் ச...