கோவை கருமத்தம்பட்டி அருகே மாயமான பெண் உறவினர்களிடம் ஒப்படைப்பு

கோவை மாவட்டம் சோமனூரை சேர்ந்த உமாதேவி என்பவர் இரண்டு ஆண்டுகளுக்கு மாயமானார். கேரள மாநிலம் கொல்லத்தில் சாலையோரம் சுற்றித்திரிந்த உமாதேவியை, தனியார் தொண்டு அமைப்பினர் மீட்டு அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர்.


கோவை: கருமத்தம்பட்டி அருகே இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மாயமான பெண்ணை மீட்டு தொண்டு நிறுவனத்தினர் உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.

கோவை கருமத்தம்பட்டி அருகே உள்ள சோமனூரை சேர்ந்தவர் உமாதேவி (வயது40).மனநலம் பாதிக்கப்பட்டவர். திருமணமாகவில்லை. இவரை அவரது அக்கா ருக்மணி என்பவர் கவனித்து வந்தார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திடீரென உமாதேவி மாயமானார்.

அவரை அவரது அக்கா பல்வேறு இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்து ருக்மணி மாயமான தனது தங்கையை கண்டுபிடித்து தரும்படி கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான உமா தேவியை தேடி வந்தனர். ஆனால் கடந்த 2 வருடமாக அவர் கிடைக்கவில்லை.

இந்த நிலையில் கேரள அரசு, வீடு இல்லாமல் சாலைகளில் சுற்றித் திரிபவர்களை கண்டுபிடித்து அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கும் பணியை தனியார் தொண்டு நிறுவனத்துடன் இணைந்து திட்டத்தை செயல்படுத்தி வந்தனர். அப்போது தொண்டு நிறுவனத்தினர் கேரள மாநிலம் கொல்லத்தில் சாலையோரத்தில் சுற்றித்திரிந்தவர்களை கண்டுபிடித்து அவர்களுக்கு சிகிச்சை மற்றும் கவுன்சிலிங் வழங்கி அவர்கள் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்கள் என்று விசாரித்தனர். அப்போது அவர்களில் உமாதேவியும் ஒருவர்.

அவரிடம் விசாரித்ததில் அவர் கோவையை சேர்ந்தவர் என்பதும், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறி வந்தது தெரிய வந்தது. இதனையடுத்து அந்த தொண்டு நிறுவனத்தினர் கருமத்தம்பட்டி போலீசாரை தொடர்பு கொண்டு உமாதேவியின் குடும்பம் எங்கு உள்ளது என விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

இதனையடுத்து கருமத்தம்பட்டி போலீசார் உமாதேவி அக்கா ருக்மணி இருக்கும் இடத்தை கண்டுபிடித்தனர். பின்னர் தொண்டு நிறுவனத்தினருடன் இணைந்து கருமத்தம்பட்டி போலீசார் உமாதேவியை அவரது அக்கா ருக்மணியிடம் ஒப்படைத்தனர்.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...