வடமாநில தொழிலாளர்களுடன் ஹோலி பண்டிகை கொண்டாடிய தொழில்துறையினர்!

தமிழ்நாடு அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளால் கோவை பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளில் இயல்பு நிலை திரும்பி வருகிறது. கோவையில் அசைவ விருந்துடன் தொழிலாளர்கள், உரிமையாளர்கள் இணைந்து ஹோலி பண்டிகை கொண்டாடினர்.


கோவை: கோவை மாவட்டத்தில் ஜவுளி, கட்டுமானம், வார்ப்படம், பம்ப்செட் உள்ளிட்ட பல்வேறு தொழிற்சாலைகளிலும், மருத்துவமனைகள், ஓட்டல்கள் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களிலும் வடமாநில தொழிலாளர்கள் அதிக அளவில் பணியாற்றி வருகின்றனர்.

தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக பரவிய வதந்தியை தொடர்ந்து தமிழக அரசு மற்றும் பிஹார், ஜார்க்கண்ட் உள்ளிட்ட மாநில அரசுகள் இணைந்து விழிப்புணர்வு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தின. இதனால் கோவை மாவட்டத்தில் தற்போது இயல்பு நிலை திரும்பி வருகிறது.



ஹோலி பண்டிகையை முன்னிட்டு பெரும்பாலான தொழில் நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. உரிமையாளர்களும் இணைந்து பண்டிகையை கொண்டாடினர்.

தமிழ்நாடு ஓபன் எண்ட் நூற்பாலைகள் சங்கத்தின்(ஓஸ்மா) தலைவர் அருள்மொழி கூறுகையில்,

தமிழ்நாடு அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளால் தற்போது தொழிலாளர்கள் மத்தியில் நிலவிய பீதி வெகுவாக குறைந்துவிட்டது. சொந்த ஊர்களுக்கு சென்ற தொழிலாளர்கள் பெற்றோரிடம் உண்மை நிலவரத்தை தெரிவித்து பண்டிகை முடிந்து 10 நாட்களில் கோவைக்கு திரும்ப உள்ளதாக கூறியுள்ளனர்.



கோவையில் தங்கியுள்ள வடமாநில தொழிலாளர்கள் ஹோலி பண்டிகையை உற்சாகத்துடன் கொண்டாட நேற்று பெரும்பாலான கழிவுபஞ்சு நூற்பாலைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. அசைவ விருந்து தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டது. உரிமையாளர்களும் இணைந்து வண்ணப்பொடிகளை தூவி தொழிலாளர்களுடன் ஹோலி பண்டிக்கையை கொண்டாடினர், என்றார்.

கோவை குறு, சிறு வார்பட தொழிற்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின்(காஸ்மாபேன்) தலைவர் சிவசண்முககுமார் கூறும்போது, வழக்கமாக ஆண்டுதோறும் ஹோலி பண்டிக்கைக்கு 50 சதவீத வடமாநில தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். இந்த ஆண்டு வதந்தியால் ஏற்பட்ட பீதி காரணமாக கூடுதலாக 15 சதவீதம் பேர் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டுச் சென்றுள்ளனர். தமிழ்நாடு அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளால் தற்போது தொழிற்சாலைகளில் இயல்பு நிலை திரும்பி வருகிறது, என்றார்.

Newsletter

கோவையில் வரசித்தி விநாயகர் கோவில் 4ம் ஆண்டு விழா மற்றும் சுப்பிரமணிய சுவாமி திருக்கல்யாண விழா

கோவை நரசிம்மநாயக்கன்பாளையம் அருள்மிகு வர சித்தி விநாயகர் திருக்கோவில் நான்காம் ஆண்டு விழா மற்றும் அருள்மிகு வள்ளி தெய்வா...

கோவை காந்திபுரத்தில் கூடுதல் பார்க்கிங் கட்டணம் வசூல்: குத்தகைதாரருக்கு ரூ.25,000 அபராதம்

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண்.68 காந்திபுரம், சீனிவாசபுரம் பகுதியில் உள்ள இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனம்...

கோவையில் ஒரே நாளில் 1000-க்கும் மேற்பட்ட சமூக நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோவை மேற்கு மாநகராட்சி சார்பில் செப்டம்பர் 26, 2026 அன்று நடைபெற்ற தீவிர வெறிநோய் தடுப்பூசி (ARV) முகாமில் ஒரே நாளில் 10...

பெரியநாயக்கன்பாளையத்தில் 5 கிலோ கஞ்சாவுடன் ஒருவர் கைது

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் சிவாஜி காலனி அருகில் மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல்துறையினர் நடத்திய சோதனையில் சுமார...

கோவையில் (29.09.2026) மதுவிலக்கு வழக்கு வாகனங்கள் பொது ஏலம்

கோயம்புத்தூர் மாவட்ட காவல் நிலையங்களில் மதுவிலக்கு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட இரு சக்கர, நான்கு சக்கர மற்றும் கனரக...

கோவையில் ஐந்து மண்டலங்களிலும் 'டெங்கு விழிப்புணர்வு வீதி' முகாம்கள்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ஐந்து வீதிகளில் 'டெங்கு விழிப்புணர்வு வீதி' என்ற தலைப்பில் இன்று (26.09.2026) விழ...