வால்பாறையில் மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

ராகுல் காந்தியின் நடைபயணம் நிறைவடைந்ததை முன்னிட்டு கோவை வால்பாறையில் கட்சி கொடியேற்றிய காங்கிரஸ் கட்சியினர், எல்.ஐ.சி, எஸ்.பி.ஐ ஆகியவற்றில் மக்கள் முதலீடு செய்த பணத்தை கடன் கொடுத்து வசூலிக்காமல் இருக்கும் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் காங்கிரஸ் கட்சியினர் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

“பாரத் ஜோடோ யாத்ரா” என்ற நடைபயணத்தை மேற்கொண்ட காங்கிரஸ் கட்சி எம்.பி ராகுல் காந்தி நிறைவு செய்ததை முன்னிட்டு ஒவ்வொரு பகுதியிலும் கட்சி கொடி ஏற்ற காங்கிரஸ் கட்சியினர் திட்டமிட்டனர். இதன் அடிப்படையில் வால்பாறை பகுதியில் பத்துக்கும் மேற்பட்ட இடத்தில் காங்கிரஸ் கட்சியினர் காங்கிரஸ் கட்சி கொடி ஏற்றினர்.



வாட்டர் பால்ஸ், ரொட்டிகடை, வால்பாறை, அண்ணா திடல், காந்தி சிலை, புதிய பேருந்து நிலையம், குரங்கு முடி போன்ற பத்துக்கு மேற்பட்ட எஸ்டேட் பகுதிகளில் காங்கிரஸ் கட்சி கொடி ஏற்றினர். இதை தொடர்ந்து வால்பாறை பழைய பேருந்து நிலையம் முன்பு மத்திய அரசை கண்டித்து சுமார் 20க்கும் மேற்பட்டவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



எல்ஐசி, ஸ்டேட் பேங்க் போன்ற வங்கிகளில் முதலீடு செய்த பணங்களை கடன் கொடுத்து கடன்களை திரும்ப பெறாமல் தள்ளுபடி செய்வதால், பொதுமக்களின் பணம் வீணாகுவதாகவும், சிலிண்டர் விலை உயர்வை கண்டித்தும், மத்திய அரசின் செயல்பாடுகள் சரியில்லை என்று கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



இந்த ஆர்ப்பாட்டத்தில் நகர செயளாலர் அமீர், மாநில பொது குழு உறுப்பினர் பேபி, கோவை தெற்கு மாவட்ட தலைவர் பகவதி, மாநில பொது குழு உறுப்பினர் ஜோதிமணி, பிரபாகரன், லசர்ஷ் முனியாண்டி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...

கோவையில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஜூலை 28 முதல்; 32 மாநில அணிகள் பங்கேற்பு

16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி...

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...