கோவையில் முதல்வர் பிறந்தநாளை முன்னிட்டு 70வது ஜோடிகளுக்கு திருமணம் - அமைச்சர் உதயநிதி பங்கேற்பு

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 70வது பிறந்தநாளைக் கொண்டாடும் விதமாக கோவை அவினாசி சாலையில் தனியார் அரங்கில் திமுக சார்பில் 70 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. இதில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு தாலியை எடுத்துக் கொடுத்து திருமணத்தை நடத்தி வைத்தார்.



கோவை: முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு கோவை மாவட்ட திமுக சார்பில் 70வது ஜோடிகளுக்குத் திருமணம் செய்து வைக்கப்பட்டது.

தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமானமு.க.ஸ்டாலினின் 70வது பிறந்தநாளை தமிழகம் முழுவதும் திமுகவினர் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் முதலமைச்சர் கூறியது போல, ஏழை எளிய மக்களுக்கு உதவுகின்ற வகையில் பிறந்தநாள் கொண்டாட்டம் கொண்டாடப்பட்டு வருகிறது.



அதன் ஒரு பகுதியாக ஒருங்கிணைந்த கோவை மாவட்ட திமுக சார்பில் 70வது ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. கோவை - அவினாசி சாலையில் உள்ள தனியார் அரங்கில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு தாலியை எடுத்துக் கொடுத்து திருமணத்தை நடத்தி வைத்தார்.



புதுமண தம்பதிகள் மற்றும் உறவினர்களுடன் தனித்தனியாகப் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டு புதுமண தம்பதிகளுக்கு ஸ்மார்ட் வாட்ச்சை பரிசாக அளித்தார்.



மேலும் 70 ஜோடிகளுக்கும் கல்யாண சீர் வரிசைகள் மற்றும் டிவி, மிக்சி, குளிர்சாதனப் பெட்டி, நாற்காலிகள் மற்றும் மின்சார அடுப்பு உள்ளிட்டவை வழங்கப்பட்டன.

இந்த நிகழ்வில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி உட்பட ஒருங்கிணைந்த கோவை மாவட்ட திமுக நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.

Newsletter

விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி கோரி கோவை ஆட்சியர் அலுவலகத்தில் கருப்புத் துண்டுடன் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் தலையில் கருப்புத் துண்டு கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் வாக்குறுதி...

வடவள்ளி பகுதி தூய்மைப் பணியாளர்களுக்கு மாநகராட்சி ஆணையர் பாராட்டு

கோயம்புத்தூர் மேற்கு மண்டல வடவள்ளி பகுதியில் மக்கும், மக்காத குப்பைகளை சிறப்பாக தரம் பிரித்த தூய்மைப் பணியாளர்கள் மற்றும...

புளியகுளம் மாநகராட்சி பள்ளிகளில் கோவை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் புளியகுளம் பகுதியில் உள்ள வெரினாடா உயர்நிலைப் பள்ளி மற்றும் ஆரம்பப் பள்ளியில் மேயர் கா.ரங...

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் நாளை (01.08.2026) மின்தடை

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை ஆகஸ்ட் 1ம் தேதி காலை 9 மணி முதல் மாலை...

திருப்பூர் மாவட்ட அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 28.54 அடியாகவும், திருமூர்த்தி அணை 35.44 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்ட விவரம்

கோவை மாவட்டத்தில் உள்ள முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 30ஆம் தேதி நீர்மட்ட நிலவரம் வெளியா...