கோவை துடியலூரில் திமுக சார்பில் முதல்வர் பிறந்த நாள் கொண்டாட்டம்

தமிழக முதல்வர் ஸ்டாலினின் 70ஆவது பிறந்தநாள் விழா, கோவை துடியலூர் 1ஆவது வட்ட திமுக சார்பில் துடியலூர் பேருந்து நிலையத்தில் கட்சிக் கொடி ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.


கோவை: முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை ஒட்டி துடியலூரில் ஒன்றாவது வட்ட திமுகவினர், கட்சிக் கொடி ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.

தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினின் 70ஆவது பிறந்தநாளை திமுகவினர் வெகு விமரிசையாகக் கொண்டாடி வருகின்றனர்.



இதன் ஒரு பகுதியாக துடியலூர் 1ஆவது வட்ட திமுக சார்பில் துடியலூர் பேருந்து நிலையத்தில் வட்ட கழக செயலாளர் ராஜசேகரன் தலைமையில், கட்சிக் கொடி ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.



இந்நிகழ்ச்சியில் பகுதி கழக செயலாளர் அருள்குமார் கலந்து கொண்டு கட்சிக் கொடியினை ஏற்றிவைத்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.

முன்னதாக 1ஆவது வார்டுக்குட்பட்ட அப்பநாயக்கன்பாளையம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு முதலமைச்சரின் காலை உணவு வழங்கும் திட்டத்தினை துவக்கி வைத்தார்.



இந்நிகழ்ச்சியில் தலைமைச் செயற்குழு உறுப்பினர் சுப்பிரமணியன், மாமன்ற உறுப்பினர் கற்பகம் ராஜசேகரன்,பகுதி கழக நிர்வாகிகள் ராக்கிமுத்து, சன்சோமு, சண்முகசுந்தரம், பிரபாகரன், சுப்பிரமணியன் மற்றும் வட்டக் கழக நிர்வாகிகள் காளிமுத்துசாமி, ஆனந்தன், உதயகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

நீட் எதிர்ப்பு ரயில் மறியல் முயற்சி: 20-க்கும் மேற்பட்ட திராவிடத் தமிழர் கட்சியினர் கைது

நாடு முழுவதும் நடைபெற்று வரும் நீட் எதிர்ப்பு போராட்டத்தின் ஒரு பகுதியாக, கோவையில் திராவிடத் தமிழர் கட்சியினர் ரயில் மறி...

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...