பூலாங்கிணர் கூட்டுக் குடிநீர் திட்ட குழாய் உடைந்து வீணாகும் நீர் - கண்டுகொள்ளாத அதிகாரிகள்!

உடுமலை அருகே பெரிய வாளவாடி ஊராட்சி மன்ற அலுவலகம் பகுதியில் பூலாங்கிணர் கூட்டுக்குடிநீர் திட்ட குழாய் உடைந்து தண்ணீர் வீணாகி வரும் நிலையில் 4 நாட்களாக அதிகாரிகள் கண்டு கொள்ளாததால் ஊராட்சி அலுவலகத்தை நீர் சூழ்ந்துள்ளதாக குற்றசாட்டு.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே பூலாங்கிணர் கூட்டுகுடிநீர் திட்ட குழாய் உடைந்து தண்ணீர் வீணாகி வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியை ஆதாரமாக கொண்டு கட்டப்பட்டுள்ள திருமூர்த்தி அணையின் மூலமாக உடுமலை, பூலாங்கிணர், கணக்கம்பாளையம், மடத்துக்குளம், குடிமங்கலம் உள்ளிட்ட கூட்டு குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், தளி கால்வாயை ஆதாரமாக கொண்டு செயல்படுத்தப்படும் இந்த திட்டத்தின் மூலம் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் பயனடைந்து வருகின்றனர்.



இந்த சூழலில் வாளவாடி பகுதியில் உள்ள பூலாங்கிணர் கூட்டுக்குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டு ஏராளமான தண்ணீர் வீணாகி வருகிறது. இதனால் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது,

அடிப்படை அத்தியாவசிய தேவையில் தண்ணீரின் பங்கு முக்கியமான ஒன்றாகும். பொது மக்களுக்கு தேவையான குடிநீரை அளித்து உதவுவதில் கூட்டு குடிநீர் திட்டங்கள் பெரிதும் உதவிகரமாக உள்ளது.

ஆனால் அதற்காக பதிக்கப்பட்ட குழாய்கள் ஆங்காங்கே உடைந்து தண்ணீர் வீணாகி வருவது வாடிக்கையாக உள்ளது. வாளவாடி ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு அருகே பூலாங்கிணர் கூட்டுக்குடிநீர் திட்ட குழாய் உடைந்து கடந்த நான்கு நாட்களாக ஏராளமான தண்ணீர் வீணாகி வருகிறது.

இந்த தண்ணீர் ஊராட்சி மற்றும் கிராம நிர்வாக அலுவலகத்தை சூழ்ந்து உள்ளது. இதனால் அலுவலகப் பயன்பாட்டுக்கு செல்லும் பொதுமக்கள் சேவையை பெற முடியாமல் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.

அதுமட்டுமின்றி தண்ணீர் வீணாகி வருவதால் பொது மக்களுக்கு குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளது. அத்துடன் சேதமடைந்த குழாயின் வழியாக கழிவுநீர் கலந்து செல்வதால் பொதுமக்களுக்கு தொற்று நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. இது குறித்து அதிகாரிகளிடம் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டி வருகின்றனர்.

கோடை வெப்பத்தின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் அணையிலும் நீர்இருப்பு வேகமாக சரிந்து வருகிறது. ஒவ்வொரு சொட்டு தண்ணீரையும் பாதுகாத்து கவனத்துடன் கையாள வேண்டிய தற்போதைய சூழலில் அதிகாரிகள் அலட்சியம் காரணமாக தண்ணீர் யாருக்கும் உபயோகம் இல்லாமல் வீணாகி வருவது வேதனை அளிக்கிறது.

எனவே பெரியவாளவாடி ஊராட்சி மன்ற அலுவலகம் பகுதியில் சேதம் அடைந்த பூலாங்கிணர் கூட்டு குடிநீர் திட்டக் குழாயை உடனடியாக சீரமைத்து பொதுமக்களுக்கு சீரான தண்ணீர் விநியோகத்தை ஏற்படுத்தி தர வேண்டும். மேலும் இனிவரும் காலங்களில் குழாயில் உடைப்புகள் ஏற்பட்டால் உடனடியாக சீரமைப்பு பணிகளை மேற்கொள்வதற்கும் அதிகாரிகள் முன்வர வேண்டும்.

இவ்வாறு பொதுமக்கள் தெரிவித்தனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...