கோவை குண்டுவெடிப்பு தினத்தில் கலவரத்தை தூண்டும் வகையில் பேசிய பிரமுகர் கைது!

கோவை குண்டுவெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில், மத கலவரத்தை தூண்டும் வகையில் பேசிய பசும்பொன் முத்து ராமலிங்க தேவர் மக்கள் பாதுகாப்பு இயக்கத்தின் நிறுவனர் இசக்கி ராஜா என்பவர் மீது போலீசார் வழக்குப்பதிவு.


கோவை: கோவை குண்டு வெடிப்பு தினத்தையொட்டி நடைபெற்ற அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் கலவரத்தை தூண்டும் வகையில் பேசியவரை போலீசார் கைது செய்தனர்.

கோவை குண்டு வெடிப்பு தினத்தையொட்டி ஆர்.எஸ்.புரம் டி.பி ரோட்டில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. இதில் பா.ஜ.க. உள்பட பல்வேறு இந்து அமைப்பினர் குண்டு வெடிப்பில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.

இதில் கலந்து கொண்ட தூத்துக்குடியைச் சேர்ந்தவரும், பசும்பொன் முத்துராமலிங்க தேவர் மக்கள் பாதுகாப்பு இயக்கத்தின் நிறுவனருமான இசக்கி என்ற இசக்கி ராஜா (37) என்பவர் இரு மதத்தினரிடையே கலவரத்தை தூண்டும் வகையில் பேசி, கொலை மிரட்டல் விடுத்தார்.

இதையடுத்து, இசக்கிராஜா மீது ஆர்.எஸ்.புரம் போலீசார் இரு மதத்தினர் இடையே கலவரத்தை தூண்டும் வகையில் பேசுதல், கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் அவரை கைது செய்து, கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

Newsletter

கே.ஜி.சாவடி பகுதியில் நாளை (15.07.2026) மின்தடை: மாதாந்திர பராமரிப்பு பணிகள்

மதுக்கரை தாலுக்கா கே.ஜி.சாவடி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை...

கீரணத்தம் பகுதியில் நாளை (15.07.2026) 8 மணி நேரம் மின்தடை

கீரணத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜூலை 15) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை...

விலாங்குறிச்சியில் நாளை (15.07.2026) மின் பராமரிப்பு பணி - 8 மணி நேரம் மின்தடை

விலாங்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தண்ண...

சைபர் கிரைம்: ஆன்லைனில் ஆபாச வீடியோ பார்த்ததாக மிரட்டி லட்சக்கணக்கில் மோசடி: 2 பேர் கைது

ஆபாச வீடியோ பார்த்ததாக கூறி போலீஸ் அதிகாரிகள் என மிரட்டி, வடமாநில வியாபாரிகளிடம் ஆன்லைன் மூலம் பணம் பறித்த வழக்கில் இருவ...

பருவத் தேர்வு கட்டணம் செலுத்தியும் அபராதம்: பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு எதிராக தொலைதூரக் கல்வி மாணவர்கள் குற்றச்சாட்டு

பருவத் தேர்வுக்கான கட்டணத்தை காலக்கெடுவுக்குள் செலுத்தியிருந்தும், தொழில்நுட்பக் கோளாறால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ப...

வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் கோவை விமான நிலையம் வந்தடைந்தன

வியட்நாம் படகு கவிழ்ப்பு விபத்தில் உயிரிழந்த 6 தமிழர்களில், திருச்சியைச் சேர்ந்த 3 பேரின் உடல்கள் கோவை சர்வதேச விமான நி...