உடுமலையில் நகராட்சிக்கு சொந்தமான ரூ.15 கோடி நிலம் மீட்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் நகராட்சிக்கு ஒதுக்கப்பட்ட நிலத்தை உரிமையாளர் ஒப்படைக்காமல் இருந்த நிலையில், ரூ.15 கோடி மதிப்பிலான நிலத்தை நகராட்சி அதிகாரிகள் மீட்டுள்ளனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலையில் நகராட்சிக்கு சொந்தமான ரூ.15 கோடி மதிப்பிலான நிலத்தை அதிகாரிகள் மீட்டனர்.

உடுமலை நகராட்சி பழனி சாலைக்கு அருகில் உள்ள நகராட்சிக்கு சொந்தமான நிலத்தில் கல்யாணி அம்மாள் லே அவுட் அமைந்துள்ளது. இங்கு நகர ஊரமைப்பு துறையால் ஒப்புதல் அளிக்கப்பட்டு 10.31 ஏக்கர் பரப்பளவில் உருவான மனைப்பிரிவின் நிலப்பரப்பில் குறிப்பிட்ட அளவு நிலம் பொது பயன்பாட்டிற்கு ஒதுக்கப்பட்டது.

அந்த வகையில் 76.61 சென்ட் சமுதாய நலக் கூடத்திற்கும், 11.69 சென்ட் வாசகர் அறை பயன்பாட்டிற்கும் ஒதுக்கப்பட்டு வகைப்பாடு செய்யப்பட்டது. இந்த இடத்தை அதன் உரிமையாளர் நகராட்சிக்கு ஒப்படைக்காமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.



இந்த இடத்தை நகராட்சியால் சுவாதீன படுத்தப்பட்டு பெயர் பலகை வைக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் யாரும் இந்த இடங்களை கிரயம் செய்ய வேண்டாம் என நகராட்சி அறிவுறுத்தி உள்ளது. இந்த இடத்தின் மொத்த மதிப்பு ரூ.15 கோடி ஆகும்.



இதுபோல உடுமலை நகராட்சியால் மனை பிரிவுகளில் ஒதுக்கப்பட்ட பொது ஒதுக்கீடு இடங்கள் ஒப்படைக்காமல் இருந்ததால் அவற்றை சுவாதீனப்படுத்த நகராட்சி நிர்வாகம் மூலம் தொடர்ந்து நடவடிக்கை எடுக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

Newsletter

கே.ஜி.சாவடி பகுதியில் நாளை (15.07.2026) மின்தடை: மாதாந்திர பராமரிப்பு பணிகள்

மதுக்கரை தாலுக்கா கே.ஜி.சாவடி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை...

கீரணத்தம் பகுதியில் நாளை (15.07.2026) 8 மணி நேரம் மின்தடை

கீரணத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜூலை 15) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை...

விலாங்குறிச்சியில் நாளை (15.07.2026) மின் பராமரிப்பு பணி - 8 மணி நேரம் மின்தடை

விலாங்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தண்ண...

சைபர் கிரைம்: ஆன்லைனில் ஆபாச வீடியோ பார்த்ததாக மிரட்டி லட்சக்கணக்கில் மோசடி: 2 பேர் கைது

ஆபாச வீடியோ பார்த்ததாக கூறி போலீஸ் அதிகாரிகள் என மிரட்டி, வடமாநில வியாபாரிகளிடம் ஆன்லைன் மூலம் பணம் பறித்த வழக்கில் இருவ...

பருவத் தேர்வு கட்டணம் செலுத்தியும் அபராதம்: பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு எதிராக தொலைதூரக் கல்வி மாணவர்கள் குற்றச்சாட்டு

பருவத் தேர்வுக்கான கட்டணத்தை காலக்கெடுவுக்குள் செலுத்தியிருந்தும், தொழில்நுட்பக் கோளாறால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ப...

வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் கோவை விமான நிலையம் வந்தடைந்தன

வியட்நாம் படகு கவிழ்ப்பு விபத்தில் உயிரிழந்த 6 தமிழர்களில், திருச்சியைச் சேர்ந்த 3 பேரின் உடல்கள் கோவை சர்வதேச விமான நி...