கோவை வேளாண்‌ பல்கலை.யில் 2 நாள் புத்தகக்‌ கண்காட்சி - ஏராளமான புத்தகங்கள் விற்பனை!

கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற 2 நாள் புத்தக கண்காட்சியில் பல்வேறு வகையான புத்தகங்கள் காட்சிப்படுத்தப்பட்டன. இதில் மாணவர்கள், ஆசிரியர்கள் என ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று தேவையான புத்தங்களை வாங்கி சென்றனர்.


கோவை: கோவையில் உள்ள வேளாண் பல்கலைக்கழகத்தில் இரண்டு நாள் புத்தக கண்காட்சி நடைபெற்றது.

கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக‌ மாணவர்‌ நல மையத்தின்‌ சார்பில் 2 நாள்‌ புத்தகக்‌ கண்காட்சி நேற்று (08.02.2023) துவங்கியது.



இந்த புத்தக கண்காட்சியை பல்கலைகழக துணை வேந்தர்‌ முனைவர்‌ கீதாலட்சுமி தொடங்கி வைத்தார்.



ஆண்டு தோறும்‌ பல்கலைக்கழக நூலகத்தால்‌ நடத்தப்படும்‌ இந்த புத்தக‌ கண்காட்சியில்‌ நாடு முழுவதிலிருந்து வேளாண்‌ புத்தக பதிப்பாளர்களும்‌ விற்பனையாளர்களும்‌ கலந்து கொண்டு தங்களது புத்தகங்களை காட்சிப்படுத்துவர்‌.

இந்தாண்டும் வேளாண்மை சம்பந்தப்பட்ட அறிவியல்‌ பாடப்‌ பிரிவுகள்‌, பொது அறிவு, போட்டி தேர்வுகளுக்கான புத்தகங்கள்‌ மற்றும்‌ பல்வேறு புதுமை படைப்புகள்‌ கண்காட்சியில்‌ இடம்‌ பெற்றிருந்தன.

இதில்‌ பல்கலைக்கழக உயர்‌ அதிகாரிகளும்‌, பேராசிரியர்களும்‌, மாணவர்களும்‌ ஆர்வத்துடன்‌ கலந்து கொண்டு தேவையான புத்தகங்களை தேர்ந்தெடுத்து சென்றனர்‌.

மேலும்‌ பல்கலைக்கழக நூலகத்திற்குத்‌ தேவையான புத்தகங்களை மாணவ மாணவியர்கள்‌ மற்றும்‌ பேராசிரியர்களின்‌ பரிந்துரையின்படி பெறப்பட்டது.

இக்கண்காட்சியில்‌ பெரும்‌ திரளாக மாணவர்களும்‌, பல்கலைக்கழக ஆசிரியப்‌ பெருமக்களும்‌ கலந்து கொண்டு சிறப்பித்தனர்‌. இப்புத்தக கண்காட்சியில்‌ அனைத்து புத்தகங்களுக்கும்‌ 20 சதவீதம்‌ தள்ளுபடி அளிக்கப்படுகிறது.

இப்புத்தத கண்காட்சி பல்கலைக்கழத்தின்‌ அனைத்து உறுப்பு கல்லூரிகளுக்கு பயனுள்ளதாக அமையும்‌. குறிப்பாக இந்தாண்டு விளையாட்டு தொடர்பான நூல்களுக்கான தனி விற்பனையகம்‌ அமைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Newsletter

சட்டவிரோத குப்பைக் குவியல்கள்: 4 பேருக்கு தலா ஒரு லட்சம் அபராதம் - கோவை மாநகராட்சி நடவடிக்கை

கோவை சிங்காநல்லூரில் சட்டவிரோதமாக குப்பைகளை குவித்த நான்கு பேருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் என ஒரே நாளில்  மொத்தம் ரூ.4 லட...

கோவையில் GKNM செவிலியர் கல்லூரியை திறந்து வைத்து துணை குடியரசுத் தலைவர் சிறப்புரை..!

கோவையில் ஜி. குப்புசாமி நாயுடு அறக்கட்டளை சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள செவிலியர் கல்லூரியை துணை குடியரசுத் தலைவர் ச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற...

அமராவதி அணையில் நீர்மட்டம் 51.45 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 379 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 22ஆம் தேதி நிலவரப்படி 51.45 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்...

கோவை அரசுப் பள்ளி மைதானங்களில் ஆர்.எஸ்.எஸ். ‘சாகா’ பயிற்சி: நடவடிக்கை கோரி மனு

கோவை காந்திமாநகர் அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் ஆர்.எஸ்.எஸ். 'சாகா' பயிற்சி நடைபெற்றதாகக் கூறி, இதுபோன்ற பயிற்சிகளை...