கோவை மாவட்ட போலீசார் அதிரடி சோதனை - ஒரே நாளில் 28 கிலோ கஞ்சா பறிமுதல்

பேரூர், மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி, கருமத்தம்பட்டி உள்ளிட்ட ஆறு உட்கோட்டங்களிலும் 46 தனிப்படை குழுக்கள் அமைக்கப்பட்டு ஒரே நாளில் அதிரடி சோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த சோதனையின் போது 9 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு 3 பேர் கைது.


கோவை: பொள்ளாச்சி, பேரூர் உள்ளிட்ட ஆறு இடங்களில் தனிப்படையினர் அதிரடியாகச் சோதனை செய்து 28 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

கோவை மாவட்டம் முழுவதும் கஞ்சா மற்றும் குட்கா விற்பனையை தடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் உத்தரவின் பேரில் போலீசார் தனிப்படை அமைத்து தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.



இந்நிலையில் பேரூர், மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி, கருமத்தம்பட்டி உள்ளிட்ட ஆறு உட்கோட்டங்களிலும் 46 தனிப்படை குழுக்கள் அமைக்கப்பட்டு இன்று ஒரே நாளில் அதிரடி சோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த சோதனையில், 9 பேர் மீது வழக்கு பதிவும், 3 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் அவர்களிடமிருந்து 28 கிலோ கஞ்சா மற்றும் கஞ்சா சாக்லேட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.



இதேபோல் அரசு தடை உத்தரவை மீறி குட்கா புகையிலை பொருட்கள் விற்பனை செய்திருந்த இரண்டு பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.



இதைத்தொடர்ந்து மேட்டுப்பாளையம் பகுதியில் அவுட்டுக்காய் எனப்படும் நாட்டு வெடிபொருள் வைத்திருந்த இரண்டு நபர்களை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 4 அவுட்டு காய்களை பறிமுதல் செய்தனர்.



காரமடை பகுதியில் சோதனை மேற்கொண்ட தனி படை போலீசார் அங்கு உரிய அனுமதி இன்றி வைத்திருந்த நாட்டுத் துப்பாக்கியை பறிமுதல் செய்து மூன்று பேரை கைது செய்தனர். மேலும் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட நபரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 600 லாட்டரி டிக்கெட் மற்றும் நான்கு சக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.

ஒரே நாளில் தொடர் குற்றச் சம்பவத்தில் ஈடுபட்டு வரும் 25 நபர்கள் மீது நன்னடத்தை வினை பத்திரம் பெற்று எச்சரித்து விடுக்கப்பட்டுள்ளனர். இதே போல் தொடர் கஞ்சா விற்பனையில் ஈடுபடும் நபர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள் என மாவட்ட போலீஸ் எஸ் பி பத்ரி நாராயணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Newsletter

திருப்பூர்: அமராவதி அணை 45.8 அடியாக உயர்வு; திருமூர்த்தி 32.95 அடி பதிவு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை ஜூலை 9ஆம் தேதி இன்று 45.8 அடி நீர்மட்டத்தை எட்டியுள்ளது. வினாடிக்கு 297 கன அடி நீர்வ...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு: தென்மேற்கு பருவமழை காரணமாக நீர் வரத்து அதிகரிப்பு

கோவை மாவட்டத்தில் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய மூன்று முக்கிய அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்வரத்து அத...

தேசிய இணைய பரிமாற்ற மையத்தில் இணைய நிர்வாக பயிற்சிக்கு SRIT மாணவி தேர்வு

கோயம்புத்தூர் Sri Ramakrishna Institute of Technology மாணவி ஷாலினி ஏ., புது தில்லி தேசிய இணைய பரிமாற்ற மையம் (NIXI) வழங்...

விவசாய நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் விற்றவர் கைது - கோவை குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை

அரசு வழங்கிய பட்டியலினருக்கான விவசாய நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் விற்பனை செய்து ஏமாற்றியதாக எழுந்த புகாரில், கவுண்டம்பாள...

கோவை மாவட்ட நீதிமன்றங்களுக்கு 20 தற்காலிக அரசு வழக்கறிஞர்கள் நியமனம்

கோவை மாவட்டத்திலுள்ள பல்வேறு நீதிமன்றங்களில் அரசு தரப்பில் ஆஜராக 20 தற்காலிக அரசு வழக்கறிஞர்களை தமிழக அரசு நியமித்துள்ளத...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலநிலைக்கேற்ற வேளாண்மை குறித்த சர்வதேச மாநாடு தொடக்கம்

Coimbatore மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "எதிர்கால வேளாண்மை: காலநிலைக்கேற்ற மற்றும் மீள்திறன்...