கோவையில் இரைப்பை குடல் எண்டோஸ்கோபி சிகிச்சை கருத்தரங்கு - வெளிநாட்டு நிபுணர்கள் பங்கேற்பதாக சங்க தலைவர் தங்கவேலு தகவல்!

இந்திய இரைப்பை குடல் எண்டோஸ்கோபி அறுவை சிகிச்சை நிபுணர்கள் (IAGES) சங்கம் சார்பில் கோவையில் வரும் பிப்.10 முதல் 12 வரை நடைபெறவுள்ள கருத்தரங்கில் இந்தியா மட்டுமின்றி வெளிநாட்டு மருத்துவ நிபுணர்களும் பங்கேற்கின்றனர்.



கோவை: இந்திய இரைப்பை குடல் எண்டோஸ்கோபி அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கத்தின் (IAGES) சார்பில் சிறப்பு கருத்தரங்கு, கோவையில் வரும் 10ஆம் தேதி தொடங்க உள்ளது.

இந்திய இரைப்பை குடல் எண்டோஸ்கோபி அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கம் (IAGES) கடந்த 1993ஆம் துவங்கப்பட்டு, இந்தியா மட்டுமின்றி, பாகிஸ்தான், பங்களாதேஷ் நேபால் உள்ளிட்ட நாடுகளில் இருந்தும், பத்தாயிரம் உறுப்பினர்களை கொண்டு செயல்பட்டு வருகிறது.

இரைப்பை குடல் தொடர்பான சிகிச்சையில் நவீன மாற்றங்கள் தொடர்பான கருத்தரங்கு, மற்றும் ஆய்வு கட்டுரைகளை தொடர்ந்து நடத்தி வரும் இச்சங்கத்தின் இருபதாவது தேசிய அளவிலான கருத்தரங்கம் கோவை கொடிசியாவில் நடைபெற உள்ளது.

இதுகுறித்து இந்திய இரைப்பை குடல் எண்டோஸ்கோபி அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கத்தின் தலைவர் டாக்டர் தங்கவேலு, மற்றும் பொருளாளர் டாக்டர் மாதேஸ் ஆகியோர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:



கோவையில் வரும் 10ஆம் தேதி துவங்கி 12ஆம் தேதி வரை நடைபெற உள்ள இந்த கருத்தரங்கில் 2000க்கும் மேற்பட்ட இளம் அறுவை சிகிச்சை மருத்துவர்கள் இந்தியா மற்றும் அண்டை நாடுகளிலிருந்தும் கலந்து கொள்ள உள்ளனர்.

அனுபவம் மற்றும் புகழ்மிக்க அறுவை சிகிச்சை நிபுணர்கள், பேராசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பயிற்சியளிக்க உள்ளனர். இரைப்பை குடல் அறுவை சிகிச்சையில் தற்போது உள்ள நவீன தொழில்நுட்பங்கள் அறுவை சிகிச்சைகள் குறித்து இளம் நிபுணர்களுக்கு நேரடி ஒளிபரப்பின் வாயிலாக காண்பிக்கப்பட உள்ளது.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். இந்த கருத்தரங்கில் தேசிய மனநலம் மற்றும் நரம்பியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் முன்னாள் இயக்குநரும் பேராசிரியருமான கங்காதர், கே.எம்.சி.எச் மருத்துவமனையின் தலைவர் டாக்டர் நல்ல பழனிசாமி, ஈஷா அமைப்பின் தலைவர் சத்குரு ஜக்கி வாசுதேவ் மற்றும் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் கீதாலட்சுமி உள்ளிட்டோர் கலந்து கொள்ள உள்ளனர்.

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...