கோவை சாலைகளில் இனி 'அ, ஆ, இ, ஈ' படிக்கலாம் மக்களே..! - தமிழுக்கு பெருமை சேர்க்கும் புதிய முயற்சி!

கோவையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரேஸ்கோர்ஸ் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மீடியா டவரில் தமிழுக்கு பெருமை சேர்க்கும் வகையில் உயிரெழுத்துக்களான அ, ஆ, இ, ஈ பதிக்கும் பணி தீவிரமாக நடைபெற்றுவருகிறது.



கோவை: கோவை மாநகரை அழகுற மாற்றும் வகையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் பல்வேறு இடங்களில் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக மக்கள் அதிகம் பயன்படுத்தும் பகுதியான ரேஸ்கோர்ஸ் பகுதியில் செயற்கை நீரூற்று மற்றும் மீடியாடவர் அமைக்கும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுவருகிறது.

இவ்விரு பணிகளும் கிட்டத்தட்ட இறுதி கட்டத்தை எட்டி விட்ட நிலையில், தமிழுக்குப் பெருமை சேர்க்கும் வகையில் இந்தப் பகுதிகளில் அ, ஆ, இ, ஈ என தமிழ் எழுத்துகளை பதிக்கும் பணியும் நடைபெற்று வருகிறது.



இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், ஸ்மார்ட் சிட்டியில் தமிழ்மொழி உணர்வை பிரதிபலிக்கும் வகையில் அ, ஆ, இ, ஈ என்ற எழுத்துகளை பதிக்கின்றோம்.



இதன் மூலம் இப்பகுதியில் எப்படி வந்தாலும் மேல்இருந்தும்., கீழே இருந்தும் எழுத்துகளை முழுமையாக படிக்க முடியும்.



குழந்தைகள் இவ்வெழுத்துகளை எளிமையாக படிக்க வாய்ப்பு கிடைக்கிறது. மேலும், மாலை நேரங்களில் ஒளிரும் விளக்குகளில் இந்த எழுத்துக்கள் பிரகாசமாக தெரியும் வகையில் அமைக்கப்பட்டுவருகிறது. அடுத்த வார இறுதிக்குள் இந்தப் பணிகள் முழுமை பெற்றுவிடும், என்றனர்.



ஸ்மார்ட் சிட்டி பணிகள் தொடர்பாக அவ்வப்போது சோதனை ஓட்டம் நடைபெற்று வரும் நிலையில், கோவை மக்கள் இவற்றின் முழுமையான வடிவை காண ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...