தாராபுரம் கொளத்துப்பாளையத்தில் சிசிடிவி கேமரா பொருத்தும் பணி - தொடங்கி வைத்த அமைச்சர் கயல்விழிசெல்வராஜ்!

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்துள்ள கொளத்துப்பாளையம் கிராமம் முழுவதும் நமக்கு நாமே திட்டத்தின் மூலமாக 52 சிசிடிவி கேமராக்கள் பொருத்தும் பணியை அமைச்சர் கயல்விழிசெல்வராஜ் தொடங்கி வைத்தார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்துள்ள கொளத்துப்பாளையம் பேரூராட்சியில் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி நகர்ப்புற பகுதிகளில் வளர்ச்சிக்காக நமக்கு நாமே திட்டம் அனைத்து மாநகராட்சி நகராட்சி பேரூராட்சி பகுதிகளில் செயல்படுத்தப்படும் எனவும், இத்திட்டத்திற்கு குறிப்பிட்ட அளவு நிதி பங்களிப்பை அளிக்கும் நபர்களுக்கு ஆண்டுதோறும் பரிசுகள் வழங்கப்படும் எனவும் அறிவித்திருந்தார்.



அந்த வகையில் இன்று கொளத்துப்பாளையம் கிராமம் முழுவதும் புதிய 52 சிசிடிவி கேமராக்கள் பொருத்தும் பணியை ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் தொடங்கி வைத்தார்.



இதுகுறித்து ஊர் பொதுமக்கள் கூறியதாவது:

கடந்த ஆறு மாதத்தில் கொளத்துப்பாளையம் கிராமத்தில் பர்னிச்சர் கடை நடத்தி வரும் தொழில் அதிபரின் வீட்டில் நகை மற்றும் ரொக்க பணத்தை வட மாநில தொழிலாளர்கள் திருடிச்சென்றனர். அதனைத் தொடர்ந்து கடந்த வாரம் பேரூராட்சி துணைத் தலைவர் கே.கே. மீசை துரைசாமி வீட்டில் ஏழு பவுன் நகை மற்றும் ரொக்க பணம் திருடுபோனது.

கொளத்துப்பாளையம் பேரூராட்சியில் வடமாநிலத்தவர்கள் அடிக்கடி வாகனங்களில் வந்து செல்வதாலும், விலை உயர்ந்த நாய், கோழி ஆடு மற்றும் தானிய பொருட்களை திருடும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதனை தடுக்கும் விதத்திலும், குற்றச்செயலில் ஈடுபடும் குற்றவாளிகளை கண்டு அறிந்து நடவடிக்கை எடுக்க, எங்கள் கிராமப் பகுதியில் நமக்கு நாமே திட்டத்தின் மூலமாக ஊர் பொதுமக்கள் சார்பில் 3லட்சத்து 50 ஆயிரம் ரூபாயும், அரசு பொது நிதியிலிருந்து 7 லட்சம் ரூபாய் பணமும் பெற்று தற்போது 10 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் கரூர் மெயின் ரோட்டில் இருந்து பள்ளிவாசல் தெரு, ஆலமரவீதி, நடுவீதி, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். இந்த நிகழ்ச்சியில் பேரூராட்சி செயலாளர், பேரூராட்சி தலைவர், திமுகவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...