கோவை வீரபாண்டி அருகே கேரள லாட்டரி சீட்டு விற்பனை - இருவர் கைது..!

வீரபாண்டியை அடுத்த காளிபாளையம் பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை செய்து வந்த இருவரை போலீசார் கைது செய்தனர்.


கோவை: கோவை மாவட்டம் வீரபாண்டி அருகே தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கேரள லாட்டரி டிக்கெட்டுகளை சிலர் விற்று வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து வீரபாண்டியை அடுத்த காளிபாளையம் பகுதியில் நேற்று பெரியநாயக்கன்பாளையம் காவல் உதவி ஆய்வாளர் முரளி தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, சந்தேகத்தின் பேரில் அங்கு சுற்றிக்கொண்டிருந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்திய போது அவர்கள் தொட்டிபாளையம் பகுதியை சேர்ந்த கார்த்திகேயன் மற்றும் சின்ன கருப்புசாமி என்பது தெரியவந்தது.

இவர்கள் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கேரள லாட்டரி டிக்கெட்டுகளை வாங்கிவந்து திருட்டுத்தனமாக விற்று வந்ததும் தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து இருவரையும் கைது செய்த போலீசார் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும் அவர்களிடம் இருந்து கேரள லாட்டரி டிக்கெட்டுகள் மற்றும் 200 ரூபாய் பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...