உடுமலை அருகே பயணிகள் நிழற்குடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் சாலைமறியல் - பரபரப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த கொழுமம் பகுதியில் பயணிகள் நிழற்குடை அமைக்கும் விவகாரத்தில் பாஜக - திமுக இடையே மோதல் ஏற்படும் சூழலில் பாஜகவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த மடத்துக்குளம் அருகே உள்ளது கொழுமம் ஊராட்சி. இந்த பகுதியில் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.15 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பீட்டில் பயணிகள் நிழற்குடை அமைக்கும் பணிகள் தொடங்கியது.

இந்நிலையில், அப்பகுதியில் பேருந்து நிறுத்தம் அமைக்கப்பட்டால் பொதுமக்களுக்கும் வாகன ஓட்டிகளுக்கும் இடையூறு ஏற்படும் எனக்கூறி பா.ஜ.க.வினர் தடுத்ததாக கூறப்படுகிறது. மேலும் இதுகுறித்து குமரலிங்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

பொதுமக்களுக்கான நலத்திட்டங்களை செயல்படுத்த விடாமல் பாஜக-வினர் இடையூறு செய்வதாக கூறி திமுகவினர் சார்பிலும் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதனால் இருதரப்பினருக்கும் மோதல் ஏற்படும் சூழல் உருவானதாக தெரிகிறது.

இதனிடையே திருப்பூர் மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் தேன்மொழிவேல் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.



மேலும் மடத்துக்குளம் தாசில்தார் செல்வி சம்பவ இடத்துக்கு சென்று ஆய்வு செய்தார்.



இதனையடுத்து பயணிகள் நிழற்குடை அமைக்கும் பணிகள் தொடங்கியது.



இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திருப்பூர் தெற்கு மாவட்ட பாஜக தலைவர் மங்கலம் ரவி தலைமையில் மாவட்ட பொதுச் செயலாளர் வடுகநாதன், உடுமலை நகரச் செயலாளர் கண்ணாயிரம் உள்ளிட்ட பாஜகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.



தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தி தனியார் திருமண மண்டபத்துக்கு அழைத்துச் சென்றனர்.



இதனையடுத்து அவர்களிடம் தாசில்தார் செல்வி பேச்சுவார்த்தை நடத்தினார்.



அப்போது, உரிய ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு இறுதி முடிவு எடுக்கும் வரை பயணிகள் நிழற்குடை அமைக்கும் பணிகளை நிறுத்தி வைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.

இருதரப்பினரும் அடுத்தடுத்து காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில், இருதரப்பினரும் ஒன்று திரண்டதால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது.

Newsletter

ஒரு என்.ஆர்.ஐ. பின்னால் அனைவரும் செல்வது போல தோற்றம் ஏற்படுத்துவது மன மகிழ்ச்சி தரவில்லை – அவிநாசியில் துணை ஜனாதிபதி

கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த துணை ஜனாதிபதி சி.பி. ர...

‘ஒரு என்.ஆர்.ஐ. பின்னால் அனைவரும் செல்வது போல தோற்றம் ஏற்படுத்துவது மன மகிழ்ச்சி தரவில்லை’ – அவிநாசியில் துணை ஜனாதிபதி

கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த துணை ஜனாதிபதி சி.பி. ர...

சட்டவிரோத குப்பைக் குவியல்கள்: 4 பேருக்கு தலா ஒரு லட்சம் அபராதம் - கோவை மாநகராட்சி நடவடிக்கை

கோவை சிங்காநல்லூரில் சட்டவிரோதமாக குப்பைகளை குவித்த நான்கு பேருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் என ஒரே நாளில்  மொத்தம் ரூ.4 லட...

கோவையில் GKNM செவிலியர் கல்லூரியை திறந்து வைத்து துணை குடியரசுத் தலைவர் சிறப்புரை..!

கோவையில் ஜி. குப்புசாமி நாயுடு அறக்கட்டளை சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள செவிலியர் கல்லூரியை துணை குடியரசுத் தலைவர் ச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற...

அமராவதி அணையில் நீர்மட்டம் 51.45 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 379 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 22ஆம் தேதி நிலவரப்படி 51.45 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...