கோவைப்புதூரில் இந்திய அரசின் யுனைட்டேட் வங்கியின் புதிய கிளை திறப்பு


இந்திய அரசின் யுனைட்டேட் வங்கியின்  புதிய கிளை கோவைப்புதூரில் இன்று காலை தொடங்கப்பட்டுள்ளது. இதனை கோவை ஸ்ரீ கிருஷ்ணா கல்விக் குழுமங்களின் நிர்வாக அறங்காவலர் மலர்விழி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வங்கியினை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் இந்திய அரசின் யுனைட்டேட் வங்கியின் நிர்வாக இயக்குநர் மற்றும் முதன்மை நிர்வாக அதிகாரி பவன் பஜாஜ் தலைமையேற்று தலைமையுரை ஆற்றினார்.



அப்போது அவர் பேசுகையில்; இந்திய அரசின் யுனைட்டேட் வங்கி பெரும்பாலனவை கிழக்கு பகுதியில் தான் தொடங்கப்பட்டுள்ளது. தற்போது வடக்கு, தெற்கு மற்றும் மேற்கு ஆகிய பகுதிகளில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்தூர், ஆக்ரா மற்றும் லூதியான போன்ற நகரங்களிலும் விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளோம். மேலும் தெற்கு பகுதிகளில் பொள்ளாச்சி மற்றும் கோயம்புத்தூர் நகரங்களில் புதிய மூன்று கிளைகள் திறக்கப்பட உள்ளது. இந்த வருடம் மட்டும்  இந்தியா  முழுவதிலும் 51 கிளைகள் திறக்கப்பட்டுள்ளது. அதில் 25 சதவீதம் கிளைகள் கிராமப்புறங்களில் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. மேலும் பணமதிப்பு இழப்பீட்டிற்கு பிறகு ரூபாய்.10 ஆயிரத்து 500 கோடி வந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.  

     

இதில், வங்கியின் பொது துணைமேலாளர் இளங்கோ, பட்டிமன்ற பேச்சாளர் ராஜா, வங்கியின் கிளை மேலாளர் அரவிந்த் சந்திரசேகர் மற்றும் வங்கி ஊழியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். 

Newsletter

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...

கோவையில் நாளை முதல் கோமாரி தடுப்பூசி முகாம் தொடக்கம் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 10 வரை கால் மற்றும் வாய் (கோமாரி) நோய் தடுப்பூசி முகாம் நடைபெறும். அனைத்த...