2 ஆண்டுகளாக சிறுமிக்கு பாலியல் கொடுமை - கோவையில் இருவர் கைது

கோவையில் 2 ஆண்டுகளாக 10 வயது சிறுமியை பாலியல் கொடுமை செய்து வந்த இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.


கோவை: 10 வயது சிறுமியை வீட்டுக்கு அழைத்து பாலியல் வன்கொடுமை செய்த இருவரை போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

கோவையை சேர்ந்தவர் ராஜ் என்கிற அதிர்ஷ்டராஜ் (27). இவருக்கு திருமணமாகி. மனைவியை விட்டு பிரிந்து வாழ்ந்து வந்தார். இந்த நிலையில் அதிர்ஷ்டராஜ், அதே பகுதியை சேர்ந்த 10 வயது சிறுமி, வீட்டுக்குள் அழைத்து வந்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதுகுறித்து வெளியில் யாரிடம் சொல்லக்கூடாது என்றும் சிறுமியை மிரட்டியுள்ளார்.

நாளடைவில், அதிர்ஷ்டராஜின் நண்பரான எட்டிமடையை சேர்ந்த சுரேஷ்பாபுவிற்கும் இந்த விஷயம் தெரியவந்தது. இதையடுத்து நண்பர்கள் இருவரும் அந்த சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

சம்பவத்தன்று அந்த சிறுமி அதிர்ஷ்டராஜ் வீட்டில் இருந்து அழுதபடி வெளியே வந்துள்ளார். இதனை கண்ட அக்கம், பக்கத்தினர் அந்த சிறுமியிடம் விசாரித்தனர். அப்போது அந்த சிறுமி, அவர்களிடம் தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து எடுத்து கூறியுள்ளார்.

இதையடுத்து அங்கிருந்தவர்கள் உடனடியாக அதிர்ஷ்டராஜ் மற்றும் சுரேஷ் பாபு ஆகிய இருவரையும் பிடித்து கோவை கிழக்கு அனைத்து மகளிர் போலீசில் ஒப்படைத்தனர். இதையடுத்து போலீசார் அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் இருவரும் அந்த சிறுமியை கடந்த 2 ஆண்டுகளாக பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது.

இதையடுத்து அவர்கள் இருவரையும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...