சின்னத்தடாகம் ஊராட்சி தலைவர் பதவி - கோவையில் மறுவாக்கு எண்ணிக்கை தீவிரம்!

கோவை மாவட்டம் சின்னத்தடாகம் ஊராட்சித் தலைவர் கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகளின் மறுவாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது.



கோவை: கடந்த 2019 ம் ஆண்டு நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில் கோவை மாவட்டம் சின்னத்தடாகம் ஊராட்சி தலைவர் பதவிக்கு திமுக ஆதரவு பெற்ற சுதா, அதிமுக ஆதரவு பெற்ற சௌந்திரவடிவு ஆகியோர் போட்டியிட்டனர். தேர்தலில் மல்லிகா என்பவரும் போட்டியிட்டார்.

அதில், திமுக ஆதரவு பெற்ற சுதா 2,553 வாக்குகள்பெற்று 4 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக முதலில் அறிவிக்கப்பட்டது. பின்னர் அதிமுக ஆதரவு பெற்ற சௌந்திரவடிவு என்பவர் 3 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இதை எதிர்த்து, திமுக ஆதரவு வேட்பாளர் சுதா கோவை முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்து வந்த கோவை மாவட்ட முதன்மை நீதிமன்றம் , சின்னதடாகம் ஊராட்சிக்கு மறுவாக்கு எண்ணிக்கை நடத்த கடந்த 5 ம் தேதி நடத்த உத்தரவிட்டதோடு, அடுத்த 15 நாட்களுக்குள் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மாவட்ட நிர்வாகத்திற்கு நீதிமன்றம் அறிவுறுத்திருந்தது.

இதனைத் தொடர்ந்து, 24ம் தேதி மறுவாக்கு எண்ணிக்கை நடத்தப்படும் என மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டு இது தொடர்பான நோட்டீஸ் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கும் பெரியநாயக்கன்பாளையம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் இருந்து அனுப்பபட்டது. மேலும் தேர்தல் நடத்தும் அலுவலராக பி.ஸ்ரீனிவாசன், உதவி தேர்தல் நடத்தும் அலுவலராக செந்தில்குமார் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.



அதன்படி, குருடம்பாளையம் அருணா நகர் சமுதாய கூடத்தில் இன்று வாக்கு எண்ணிக்கை 12 மணியளவில் தொடங்கியது.



இதற்கான வாக்குப்பெட்டிகள் நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு கொண்டுவரப்பட்டன. தற்போது, வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது. இதன் முடிவுகள் நீதிமன்றம் மூலம் அறிவிக்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவையில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலம் மீட்பு; 3 மாடி வணிக வளாகம் இடிப்பு - மாநகராட்சி நடவடிக்கை..!

கோவை ஆவாரம்பாளையத்தில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலத்தை மீட்கும் நடவடிக்கையாக, நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ஆக்கிரமிப்ப...

கோவை TNAU மாணவி உயிரிழப்பு: மரணத்தில் சந்தேகம் என குடும்பத்தார்; போலீசார் தீவிர விசாரணை

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில்(TNAU) பி.எஸ்.சி. 2-ஆம் ஆண்டு படித்து வந்த மாணவி விடுதி குளியலறையில் உயிரிழந்...

கோவையில் ஒரே நாளில் 1,022 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து ஜனவரி 11, 2026 அன்று அரசு மருத்துவமனை, நீதிமன்ற வளா...

கோவையில் ஆர்எஸ்.புரம் ஹாக்கி மைதானம் உள்ளிட்ட இடங்களில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, R.S.புரம் ஹாக்கி மைதானம், நேரு உள் விளையாட்டு அரங்கம், கிருஷ்ணம்பதி குளம்...

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் 2146 மாணவர்களுக்கு பட்டமளிப்பு

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் 18-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 2146 மாணவர்களுக்கு பட்டங்களும், 18 ஆய்வாள...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர்கள் 25ஆம் ஆண்டு வெள்ளி விழாவில் 30 லட்சம் ரூபாய் நிதியுதவி

கோவை வட்டமலைப்பாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 2001 பட்டதாரிகளின் 25ஆம் ஆண்டு வெள்ளி விழா சிறப்பாக நடைபெற்...