மாணவர்களை யாகபூஜைக்கு அழைத்து சென்ற தனியார் பள்ளி - உடுமலையில் வாலிபர் சங்கம் ஆர்ப்பாட்டம்!

உடுமலைப்பேட்டையில் தனியார் பள்ளி மாணவர்களை யாக பூஜையில் பங்கேற்க வைத்த பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் உள்ள தனியார் பள்ளியில் பயின்று வரும் மாணவர்களை யாக பூஜைக்கு பள்ளி நிர்வாகம் யாக பூஜைக்கு அழைத்து சென்றதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வந்த நிலையில், உடுமலை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் நடைபெற்றது.



இந்திய ஜனநாயக வாலிபர் சங்க உடுமலை ஒன்றிய செயலாளர் தமிழ்த்தென்றல் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், பள்ளி வேளையில் கல்வி கற்க வேண்டிய மாணவர்களை அரசியல் சாசனத்திற்கு எதிராக மதம் சார்ந்த நிகழ்வில் பங்கெடுக்க வைத்த பள்ளி நிர்வாகத்தின் மீதும் அதற்கு துணையாக இருந்த அதிகாரிகள் மீதும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகங்களின் மீது தமிழ்நாடு அரசும் மாவட்ட நிர்வாகமும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலரும் உடனடியாக தீவிர விசாரணை மேற்கொண்டு தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பள்ளி வளாகங்களில் மதம் சார்ந்த நிகழ்வுகளை அனுமதிக்க கூடாது உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.



ஆர்ப்பாட்டத்தில், இந்திய மாணவர் சங்கத்தின் திருப்பூர் மாவட்ட செயலாளர் பிரவீன், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் முன்னாள் தாலுகா செயலாளர் கி.கனகராஜ், முன்னாள் மாவட்ட பொருளாளர் ஓம் பிரகாஷ், கமிட்டி உறுப்பினர் லோகேஷ்வரன் ஆகியோர் கலந்து கோரிக்கைகளை எடுத்துரைத்தனர்.

மேலும், இதில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் நிர்வாகிகள் கார்த்தி, மகேந்திரன், கருப்பசாமி, சுப்ரமணி, அய்யனார், மாதர் சங்கம் சசிகலா, சி.ஐ.டி.யூ நிர்வாகிகள் ஜெகதீசன், ரங்கநாதன், காளிமுத்து உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

தமிழ்நாடு நாள் விழா: கங்கா செவிலியர் கல்லூரியில் தமிழர் பாரம்பரியத்தைப் பறைசாற்றிய மாணவர்கள்.

கோவையிலுள்ள கங்கா செவிலியர் கல்லூரியில், மாணவர் செவிலியர் சங்கம் சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு தின விழாவில், தமிழர் பாரம்ப...

துடியலூர் தொப்பம்பட்டியில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு

கோவை துடியலூர் அருகே தொப்பம்பட்டி யமுனா நகரில் நேற்று இரவு இரண்டு வீடுகளில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 4 ஓட்டு வீடுகள் எ...

கோவை மாநகராட்சி வார்டு 22 திமுக கவுன்சிலர் கட்சியில் இருந்து விலகல்

திமுகவில் ஜனநாயகத்திற்கும் உழைப்பிற்கும் அங்கீகாரம் இல்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கோவை மாநகராட்சி 22-வது...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...