கிணத்துக்கடவு அருகே விபத்து ஏற்படுத்திய தனியார் பேருந்து ஒட்டுநர்கள் உரிமம் ரத்து!

கிணத்துக்கடவு அருகே அதிவேகமாகத் தனியார் பேருந்துகளை இயக்கி விபத்தை ஏற்படுத்திய 2 ஓட்டுநர்களின் ஓட்டுநர் உரிமம் தற்காலிக ரத்து.


கோவை: கிணத்துக்கடவு அருகே சென்றாம்பாளையம் பிரிவு பகுதியில் போட்டிப்போட்டுக் கொண்டு பேருந்துகளை இயக்கிய விபத்தை ஏற்படுத்திய தனியார் பேருந்து ஓட்டுநர்கள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள கோதவாடியை சேர்ந்த சிவலிங்கம் என்பவருடைய மனைவி அங்காத்தாள்(55). அவர்களது மகன் முனியப்பன்(35). இவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த 17ஆம் தேதி அங்காத்தாள் மற்றும் முனியப்பன் ஆகியோர் கோவை- பொள்ளாச்சி நான்கு வழிச்சாலையை சென்றாம்பாளையம் பிரிவு பகுதியில் சாலையைக் கடக்க முயன்றனர்.

அப்போது அந்த வழியாக வந்த 2 தனியார் பேருந்துகள் அடுத்தடுத்து 2 பேர் மீதும் மோதியது. இதில் அங்காத்தாள் உயிரிழந்தார். முனியப்பனுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து கிணத்துக்கடவு போலீசார் விசாரணை நடத்தினர். அதில், விபத்தை ஏற்படுத்திய 2 பேருந்துகளும் போட்டிப்போட்டுக் கொண்டு அதிவேகமாக இயக்கப்பட்டது தெரியவந்தது.

இதனால் அந்த பேருந்துகளின் ஓட்டுநர்களான பொள்ளாச்சி கோட்டூரைச் சேர்ந்த சந்தோஷ்(30), திருப்பூர் மாவட்டம் உடுமலை, செல்லப்பம்பாளையத்தை சேர்ந்த செந்தில்குமார்(38), ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

மேலும் அவர்களது ஓட்டுநர் உரிமத்தை(லைசென்ஸ்) ரத்து செய்ய இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், பொள்ளாச்சி வட்டாரப் போக்குவரத்து அதிகாரி முருகானந்தத்திற்கு பரிந்துரை செய்தார். அவர், லைசென்சை தற்காலிகமாக ரத்து செய்து நடவடிக்கை எடுத்தார்.

மேலும் விபத்தை ஏற்படுத்திய ஒரு பேருந்தில் வேகக் கட்டுப்பாட்டுக் கருவி உடைக்கப்பட்டு இருந்ததால், அதன் தகுதி சான்று ரத்து செய்யப்பட்டது. அதிவேகமாக இயக்கப்படும் பேருந்துகள் மற்றும் ஓட்டுநர்கள் மீது நடவடிக்கை தொடரும் என்று வட்டார போக்குவரத்து அதிகாரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Newsletter

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...

கோவையில் ரயிலில் அடிபட்டு உயிரிழந்ததாக கருதப்பட்ட புகைப்படக் கலைஞர் வழக்கில் அதிர்ச்சி திருப்பம்; திட்டமிட்டு கொலை செய்ததாக 2 பேர் நீதிமன்றத்தில் சரண்

கோவை தடாகம் அருகே காணாமல் போன புகைப்படக் கலைஞர் பிரவீன், ரயிலில் அடிபட்டு உயிரிழந்ததாக முதலில் கருதப்பட்ட நிலையில், அவரை...