கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பின் சார்பில் கோவை பெரியகுளத்தினை சுத்தம் செய்த தன்னார்வலர்கள்


கோவை மாவட்டத்தில் பல்வேறு குளங்கள் தூர்வாரப்படாமல் முற்றிலும் சிதிலமடைந்து  காணப்படுகிறது. சரியான பராமரிப்பு இன்மை, சீமைக் கருவேளமரங்கள்  அதிகரிப்பு, ஆகாயத் தாமரை உள்ளிட்டவையால் கோவை மாவட்டத்தில் பல குளங்கள் இருந்ததற்கான சாட்சியங்களே இல்லாத அளவுக்கு அழிந்துபோய்விட்டன.

அவ்வாறாக தற்போது அழிந்துவரும் குளங்களை மீட்டெடுக்கும் வகையில் கோவையில் மாணவர்கள், பொதுமக்கள், தன்னார்வலர்கள் ஆகியோர் சமூக வளைதலங்கள் மூலம் ஒன்றிணைந்து கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு என ஒரு அமைப்பு துவங்கப்பட்டுள்ளது.



இவ்வமைப்பின் சார்பில் இன்று கோவை பேரூரில் அமைந்துள்ள பெரியகுளத்தினை தூர்வாரும் பணி நடைபெற்றது. இதில் சுமார் 150-க்கும் மேற்பட்டோர் தூய்மை பணியில் ஈடுபட்டனர்.

அப்போது அப்பகுதியில் சுமார் 15 ஏக்கருக்கும் மேல் குளத்துப் பகுதியில் வளர்ந்திருந்த சீமைகருவேள மரங்கள், புதர்செடிகள் உள்ளிட்டவை அகற்றப்பட்டது. இவர்களுக்கு உறுதுணையாக மூன்று ஜே சி பி இயந்திரங்களும் பயன்படுத்தப்பட்டது.

இதுகுறித்து இதன் ஒருங்கிணைப்பாளர் மணிகண்டன் கூறுகையில், கோவை மாவட்டத்தில் பராமரிப்பு இன்றி  உள்ள குளங்களை மீட்டெடுக்கும் வகையில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு துவங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வாரந்தோறும் ஞாயிறன்று மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு குளங்களுக்குச் சென்றும் குப்பைகள் அகற்றப்பட்டு, தூய்மை செய்யப்பட்டு பராமரிக்கப்படும்.

தற்போது இந்த அமைப்பில் 150 பேர் இணைந்து இன்று பேரூர் பெரியகுளத்தில் தூய்மை பணியில் ஈடுபட்டோம். இதில் 15 ஏக்கரில் இருந்த சீமைகருவேள மரங்கள் அகற்றப்பட்டுள்ளது. தொடர்ந்து மீதமுள்ள மரங்களை அகற்றும் பணியும் நடைபெற்று வருகிறது. இதில், மேலும் சில தன்னார்வ நிறுவனங்கள் எங்களுடன் இணைந்து பணியாற்ற வேண்டும். இதற்கு தேவையான நிதிவுதவி வழங்க அரசு முன்வர வேண்டும்" இவ்வாறு தெரிவித்தார்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் இரண்டாவது பொறுப்பேற்பு விழா

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் கோவையில் இரண்டாவது பொறுப்பேற்பு விழாவை நடத்தியது. புதிய நிர்வாக...