'எம்.ஜி.ஆரின் அரசியல் வாரிசு கமல்ஹாசன்..!' - கோவையில் ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு

எம்.ஜி.ஆரின் 106 வது பிறந்தநாளையொட்டி கோவையில் மக்கள் நீதி மய்யம் சார்பில் கோவையில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. எம்.ஜி.ஆரின் அரசியல் வாரிசு கமல்ஹாசன் என்ற வாசகம் இடம் பெற்றிருப்பதால் பரபரப்பு.



கோவை: தமிழ்நாட்டின் முன்னாள் மறைந்த முதலமைச்சரும், அதிமுகவின் நிறுவனருமான எம்.ஜி.ஆரின் 106 ஆவது பிறந்தநாள், மாநிலம் முழுவதும் அதிமுகவினரால் கொண்டாடப்பட்டு வருகிறது.

இதையொட்டி, அவரது உருவச்சிலை மற்றும் புகைப்படத்திற்கு, பல்வேறு அரசியல் கட்சியினர், பொதுமக்கள், எம்ஜிஆர் ரசிகர்கள், சினிமா துறையினர் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.



இந்நிலையில், கோவையில் தெற்கு தொகுதி 80வது வார்டு மக்கள் நீதி மய்யம் கட்சியினர் சார்பில் எம்.ஜி.ஆரின் பிறந்தநாளை முன்னிட்டு லங்கா கார்னர் உள்ளிட்ட பகுதிகளில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.



அதில், "துணிவு அரசியல் செய்த எம்.ஜி.ஆரின் அரசியல் வாரிசு நம்மவர் கமல்ஹாசன்" என்ற வாசகங்கள் இடம்பெற்றுள்ளன.



அத்துடன் எம்ஜிஆருடன் கமலஹாசன் சிறுவயதில் நடித்த "ஆனந்த ஜோதி" திரைப்படத்தின் புகைப்படமும், எம்.ஜி.ஆர் கமலஹாசனுக்கு விருது வழங்கிய புகைப்படமும் இடம் பெற்றுள்ளன.

எம்.ஜி.ஆர் பிறந்தநாளுக்கு மக்கள் நீதிமய்யம் சார்பில் ஒட்டப்பட்டுள்ள இந்த போஸ்டர்களால் கோவையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் இரண்டாவது பொறுப்பேற்பு விழா

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் கோவையில் இரண்டாவது பொறுப்பேற்பு விழாவை நடத்தியது. புதிய நிர்வாக...