கோவை காவலர் பயிற்சி பள்ளி மைதானத்தில் பொங்கல் விழா - குடும்பத்தினருடன் கொண்டாடிய கோவை மாநகர போலீசார்

கோவை மாநகர காவல்துறை சார்பில் காவலர் பயிற்சி பள்ளி மைதானத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில், கோவை மாநகர காவல்துறையினர் தங்கள் குடும்பத்தினருடன் கலந்து கொண்டு பொங்கல் வைத்து உற்சாகமாக கொண்டாடினர்.


கோவை: பொங்கல் பண்டிகை உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக கோவை காவலர் பயிற்சி பள்ளி மைதானத்தில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.



இந்த நிகழ்வில், கோவை மாநகர காவல் துறையினர் அவர்களது குடும்பத்தினருடன் பொங்கல் வைத்து பொங்கல் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடினர்.



மேலும் இந்த பொங்கல் விழாவில் கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் அவரது குடும்பத்தினருடன் கலந்து கொண்டு அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டார்.



இந்த பொங்கல் விழாவில், பொங்கல் பொங்கி வரும் பொழுது அனைவரும் பொங்கலோ பொங்கல் என அனைவரும் முழக்கமிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.



மேலும் அனைவரும் கும்மி அடித்து பொங்கல் பாட்டு பாடி மகிழ்ச்சியுடன் பொங்கலை கொண்டாடினர்.



கோவை காவலர் பயிற்சி பள்ளி மைதானத்தில் நடைபெற்ற இந்த பொங்கல் விழாவில், மாநகர காவல் துறையை சேர்ந்த காவலர்கள் தங்கள் குடும்பத்தினருடன் கலந்துகொண்டு, தனித்தனியாக பொங்கல் வைத்து படையலிட்டு சூரியனை வழிபட்டனர்.

Newsletter

பேரூராட்சி தலைவரிடம் சாலை, வடிகால் வசதி கோரிக்கை மனு அளித்த இடிகரை மகாலட்சுமி கார்டன் மக்கள்

இடிகரை பேரூராட்சி மணியக்காரன்பாளையம் வார்டு 6-க்கு உட்பட்ட மகாலட்சுமி கார்டன் பகுதியில் சாலை மற்றும் வடிகால் வசதி இல்லாத...

கோவையில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலம் மீட்பு; 3 மாடி வணிக வளாகம் இடிப்பு - மாநகராட்சி நடவடிக்கை..!

கோவை ஆவாரம்பாளையத்தில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலத்தை மீட்கும் நடவடிக்கையாக, நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ஆக்கிரமிப்ப...

கோவை TNAU மாணவி உயிரிழப்பு: மரணத்தில் சந்தேகம் என குடும்பத்தார்; போலீசார் தீவிர விசாரணை

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில்(TNAU) பி.எஸ்.சி. 2-ஆம் ஆண்டு படித்து வந்த மாணவி விடுதி குளியலறையில் உயிரிழந்...

கோவையில் ஒரே நாளில் 1,022 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து ஜனவரி 11, 2026 அன்று அரசு மருத்துவமனை, நீதிமன்ற வளா...

கோவையில் ஆர்எஸ்.புரம் ஹாக்கி மைதானம் உள்ளிட்ட இடங்களில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, R.S.புரம் ஹாக்கி மைதானம், நேரு உள் விளையாட்டு அரங்கம், கிருஷ்ணம்பதி குளம்...

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் 2146 மாணவர்களுக்கு பட்டமளிப்பு

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் 18-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 2146 மாணவர்களுக்கு பட்டங்களும், 18 ஆய்வாள...