மாமன்ற உறுப்பினர்களுக்கு நற்சான்றிதழ் - பட்டியல் அளிக்க கோவை மாநகராட்சி ஆணையர் உத்தரவு

கோவை மாநகராட்சியில்‌ சிறப்பாகச் செயல்படும்‌ மாமன்ற உறுப்பினர்களின் பட்டியல்‌ தயாரித்து அளிக்கும்படி மண்டல உதவி ஆணையர்களுக்கு, மாநகராட்சி ஆணையர் மு.பிரதாப்‌ உத்தரவு.


கோவை: கோவை மாநகராட்சியில்‌ சிறப்பாகச் செயலாற்றிவரும்‌ மாமன்ற உறுப்பினர்களுக்குப் பாராட்டு தெரிவித்து சான்றிதழ்‌ வழங்கப்பட உள்ளது. இதற்கான பட்டியலைத் தயாரித்துச் சமர்ப்பிக்குமாறு மண்டல உதவி ஆணையர்களுக்கு மாநகராட்சி ஆணையாளர்‌ மு.பிரதாப்‌ உத்தரவிட்டுள்ளார்‌.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

கோவை மாநகராட்சியில்‌ சிறப்பாகச் செயலாற்றிவரும்‌ மாமன்ற உறுப்பினர்களைப் பாராட்டி குடியரசு தினவிழாவில்‌, நற்சான்றிதழ்‌ வழங்கப்பட உள்ளது. அதன்படி ஒரு மண்டலத்திற்கு ஒரு மாமன்ற உறுப்பினர்‌ வீதம்‌ 5 மண்டலத்திற்கு 5 மாமன்ற உறுப்பினர்களைத் தேர்வு செய்து அவர்களின்‌ பெயர்‌ பட்டியலை எதிர்வரும்‌ 19ஆம்‌ தேதிக்குள்‌ ஆணையர்‌ அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும்‌.

மாமன்ற கூட்டத்திற்கு வருகை தந்ததற்கு 10 மதிப்பெண்‌, மாமன்ற கூட்டத்தில்‌ ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளை வழங்கியதற்கு 5 மதிப்பெண்‌, நமக்கு நாமே திட்டத்துக்கான பங்களிப்பு 10 மதிப்பெண்‌, திடக்கழிவு மேலாண்மைத்‌ திட்டம்‌ செயலாக்கத்தில்‌ பங்களிப்புக்கு 10 மதிப்பெண்‌, பொது ஒதுக்கீட்டு இடம்‌ மீட்பு மற்றும்‌ பராமரிப்பு பணியில்‌ பங்களிப்புக்கு 5 மதிப்பெண்‌, வரிவசூலிப்புப்‌ பணிகளில்‌ பங்களிப்புக்கு 5 மதிப்பெண்‌, பொதுமக்களிடையே நன்மதிப்புக்கு 5 மதிப்பெண்‌ என மொத்தம்‌ 50 மதிப்பெண்களுக்கு மதிப்பீடு வழங்கப்படும்‌.

மாமன்றத்திற்கு வருகை, ஆக்கப்பூவமான ஆலோசனை ஆகியவற்றுக்கான மதிப்பெண்கள்‌ மாமன்ற செயலாளர்‌ மூலம்‌ அனைத்து வார்டுகள்‌ குழு உதவி ஆணையர்களுக்கும்‌ தனியாக அனுப்பி வைக்கப்படும்‌.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...