ஊழல் அதிகரித்துள்ளதால் தொழில் முதலீடுகள் வேறு மாநிலங்களுக்கு செல்லும் அவலம் - பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தகவல்

கோவை: ஊழல் அதிகரித்துள்ள காரணத்தால் தமிழகத்துக்கு வர வேண்டிய தொழில் முதலீடுகள் பிற மாநிலங்களுக்கு செல்லும் அவல நிலை காணப்படுகிறது. இது நல்லதல்ல, என பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை பேசினார்.



கோவை: குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான(எம்எஸ்எம்இ) தேசிய தொழில் அமைப்பு லகு உத்யோக் பாரதி சார்பில் தென்மண்டல மாநாடு கோவையில் நேற்று நடந்தது.



பாஜக தேசிய மகளிரணி தலைவி மற்றும் எம்எல்ஏ வானதி சீனிவாசன் மாநாட்டை தொடங்கி வைத்தார்.



நாடாளுமன்ற விவகாரங்கள் மற்றும் கலாச்சாரத்துறை இணை அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் பேசுகையில், நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு சிறப்பாக ஆட்சி செய்து வருகிறது.

நகர்புறங்களில் உள்ள வசதிகளை கிராமப்புறங்களுக்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற உன்னத நோக்கத்துடன் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. எம்எஸ்எம்இ வளர்ச்சிக்கு தேவையான உதவிகளை மத்திய அரசின் கவனத்தக்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்க உதவி செய்யப்படும் என்றார்.



பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை பேசியதாவது:

இன்று பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளால் உலக நாடுகள் பல தவித்து வரும் நிலையில் பிரதமர் மோடி தலைமையிலான சிறப்பான ஆட்சி காரணமாக இந்தியாவில் பாதிப்பு ஏற்படவில்லை.

கரோனா நோய்தொற்று பரவல் காலத்திலும் தொழில்துறை நெருக்கடியில் இருந்து மீள உதவும் வகையில் அவசர கால கடனுதவி திட்டங்களை மத்திய அரசு அமல்படுத்தி உதவியது.

நாட்டின் மொத்த ஏற்றுமதியில் எம்எஸ்எம்இ குறிப்பிடத்தக்க பங்கு வகிக்கிறது. நாட்டின் வளர்ச்சிக்கு பல்வறு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வரும் நிலையில், தமிழகத்தில் உள்ள அரசுதுறைகளில் ஊழல் அதிகரித்து காணப்படுவதால் தொழில் வளர்ச்சி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

உரிமம் பெறுதல் உள்ளிட்ட தொழில் தொடங்க தேவையான அனைத்து நடவடிக்கைகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும், அரசு அதிகாரிகளுக்கு மிகப்பெரிய தொகை லஞ்சமாக கொடுக்க வேண்டியுள்ளது.

இந்த அவல நிலை காரணமாக தமிழகத்துக்கு வர வேண்டிய தொழில் முதலீடுகள் பல கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களுக்கு சென்று கொண்டுள்ளன. இது நல்லதல்ல.

இவ்வாறு அவர் பேசினார்.

லகு உத்யோக் பாரதி, மாநில தலைவர் விஜயராகவன் தலைமையில் இணைப்பொதுச்செயலாளர் சிவக்குமார், மாநில துணைத் தலைவர் கல்யாண்சுந்தரம் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் மாநாடு ஏற்பாடுகள் செய்தனர்.



லகு உத்யோக் பாரதி, அகில இந்திய தலைவர் பல்தேவ் பாய் பிரஜாபதி, இணை பொதுச்செயலாளர் மோகனசுந்தரம், துணைத் தலைவர் ஹரிஹரன் உள்பட தமிழகம், கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, புதுச்சேரியில் உள்ளிட்ட பல்வறு பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர்.

டிஜிட்டல் மாற்றம், உள்ளூர் உற்பத்தியை ஊக்குவித்தல், தொழில் மேம்பாடு, தலைமை பண்பு உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் நிபுணர்கள் பேசி கலந்துரையாடினர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம் மற்றும் சோலையாறு அணைகளின...