'மக்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதே நோக்கம்..!' - கோவை டிஐஜி விஜயகுமார் உறுதி

கோவை சரக காவல்துறை துணைத் தலைவராக விஜயகுமார் பொறுப்பேற்றுக் கொண்டார்.



கோவை: கோவை சரக காவல்துறை துணைத் தலைவராக பணியாற்றி வந்த முத்துசாமி பணிமாறுதல் பெற்றதைத் தொடர்ந்து, கோவை சரக காவல்துறையின் புதிய துணைத் தலைவராக விஜயகுமார் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

இவர் கடந்த 2009ம் ஆண்டு ஐ.பி.எஸ் தேர்ச்சி பெற்று காவல்துறை பணியில் இணைந்தார். இதனைத் தொடர்ந்து காஞ்சிபுரம், கடலூர், நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணியாற்றியுள்ளார்.

இதனிடையே சென்னையில் அண்ணா நகர் துணை ஆணையராக பணியாற்றி வந்த இவருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டது.



இதன் அடிப்படையில் கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள டி.ஐ.ஜி அலுவலகத்திற்கு வந்த விஜயகுமார் கோப்புகளில் கையெழுத்திட்டு கோவை சரக காவல்துறை துணைத் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

அவருக்கு காவல்துறை அதிகாரிகள் மலர் கொத்துக்களை கொடுத்து வாழ்த்துக்களை தெரிவித்தனர். பொதுமக்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளை கண்டறிந்து அதற்கு தீர்வு வழங்கி மக்களை திருப்பதியாக வைத்திருப்பதே எங்கள் நோக்கமாக இருக்கும் என்று விஜயகுமார் தெரிவித்தார்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...