நீலகிரி உதகையில் நடைபெற்ற கோத்தர் இன மக்களின் குலதெய்வ பண்டிகை - பாரம்பரிய இசை, நடனத்துடன் நிறைவு

உதகை அடுத்த கோக்கால் கிராமத்தில் கடந்த 10 நாட்களாக நடைபெற்று வந்த கோத்தர் இன மக்களின் குலதெய்வ பண்டிகையின் இறுதியில் பாரம்பரிய இசையுடன் அரங்கேறிய ‘ஆட்குப்ஸ்’ நடனம் அனைவரையும் வெகுவாக கவர்ந்தது.



நீலகிரி: நீலகிரி மாவட்டம் உதகை அருகேயுள்ள கோக்கால் கிராமத்தில் கோத்தர் இனத்தை சேர்ந்த 120 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராம மக்கள் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை தங்களது குல தெய்வமான அய்யனோர், அம்மனோர் கோவில் திருவிழாவை கொண்டாடுவது வழக்கம்.

இந்த நிகழ்விற்கு முன்னதாக அந்த கிராமத்தில் கடந்த 2 ஆண்டுகளில் இறந்தவர்கள் ஆன்மா சாந்தியடைய வேண்டும் நடத்தப்படும் வர சாவு நிகழ்ச்சியை நடத்தினர்.

இதனை தொடர்ந்து கடந்த 23ஆம் தேதி முதல் தங்களது கிராமத்திற்குள் வெளியாட்களை அனுமதிக்காமல், விரதம் இருந்து தினந்தோறும் பல்வேறு சடங்குகளை கடைபிடித்து அய்யனோர், அம்மனோர் பண்டிகைக்கு ஏற்பாடு செய்தனர்.

இதையடுத்து, கடந்த 27ஆம் தேதி வழிபாடு செய்வதற்கு புதுப் பானை தயாரிக்க களிமண் எடுத்து வரும் நிகழ்வு நடைபெற்றது. இதில், நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் களிமண்ணை தலை மீது சுமந்து சென்று, தங்கள் வீடுகளில் புது பானைகள், தட்டுகளை தயாரித்தனர்.

இந்நிலையில் புத்தாண்டன்று, சாமை அரிசி, அவரை மற்றும் நெய் ஆகியவற்றால் உணவு தயாரித்து குலதெய்வங்களுக்கு படைத்து சிறப்பு வழிபாடு செய்தனர்.



அப்போது, கிராமத்தின் மைய பகுதியில் பாரம்பரிய உடைகள் மற்றும் அணிகலன்கள் அணிந்து ஒன்று திரண்ட கோத்தர் இன மக்கள், தங்களது கலாச்சார இசையுடன் உற்சாகமாக நடனமாடினர்.



மேலும், 10 நாட்கள் நடைபெற்ற இந்த குல தெய்வ பண்டிகையின் இறுதியாக ஆண்கள் ராஜாக்களை போல தலைபாகையுடன் வேடமிட்டு ஆட்குப்ஸ் என்ற நடனம் அரங்கேற்றியது அனைவரையும் வெகுவாக கவர்ந்தது.

Newsletter

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் நாளை (01.08.2026) மின்தடை

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை ஆகஸ்ட் 1ம் தேதி காலை 9 மணி முதல் மாலை...

திருப்பூர் மாவட்ட அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 28.54 அடியாகவும், திருமூர்த்தி அணை 35.44 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்ட விவரம்

கோவை மாவட்டத்தில் உள்ள முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 30ஆம் தேதி நீர்மட்ட நிலவரம் வெளியா...

கோவை முன்னாள் படைவீரர்கள் அலுவலகத்தில் ஆய்வு; நலத்திட்ட உதவிகள் வழங்கிய அமைச்சர் சரத்குமார்

கோவை முன்னாள் படைவீரர்கள் அலுவலகத்தில் தமிழ்நாடு மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் சரத்குமார் ஆய்வு மேற்கொண்டு, முன்னாள் ப...

வார்டு வளர்ச்சிப் பணிகள் புறக்கணிப்பு குற்றச்சாட்டு; கோவையில் தி.மு.க கவுன்சிலர் தர்ணா

கோவை அருகே தென்கரை பேரூராட்சி மன்றக் கூட்டத்தின் போது, தனது வார்டில் வளர்ச்சிப் பணிகள் மற்றும் தூய்மைப் பணிகள் புறக்கணிக...

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...