கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு டவுன்ஹால் புனித மைக்கேல் தேவாலயத்தில் சிறப்பு திருப்பலி, ஆராதனை

கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள புனித மைக்கேல் தேவாலயத்தில் நள்ளிரவு முதல் சிறப்பு திருப்பலி, ஆராதனையில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.


கோவை: உலகம் முழுவதும் இன்றைய தினம் கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள புனித மைக்கேல் தேவாலயத்தில் நள்ளிரவு முதல் சிறப்பு திருப்பலி மற்றும் ஆராதனை நிகழ்வானது நடைபெற்றது.



கோவை மறைமாவட்ட ஆயர் தாமஸ் ஆக்வினஸ் இந்த சிறப்புத் திருப்பலியை துவக்கி வைத்து, குழந்தை இயேசு உருவ மொம்மைய அனைவரிடமும் தூக்கி காட்டி குழந்தை ஏசு பிறப்பை அறிவித்தார்.



பின்னர் அதனை கொண்டு சென்று குடிலில் வைத்த பின் ஆராதனைகள் மற்றும் சிறப்புத் திருப்பலி நிகழ்வுகளை மறைமாவட்ட ஆயர் தாமஸ் ஆக்வினஸ் நடத்தினார்.



இந்த சிறப்பு பிரார்த்தனை நிகழ்வில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பங்கேற்றனர். இதில், அனைத்து தரப்பு மக்களும் மகிழ்ச்சியுடனும் ஆரோக்கியத்துடனும் இருக்க பிரார்த்தனை நடத்தப்பட்டது.



இந்நிலையில், இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகை உற்சாகமாக துவங்கி உள்ளது. பரிசு பொருட்கள் மற்றும் உணவுப் பொருட்களை பறிமாறிக் கொள்வதுடன், அடுத்த ஆண்டு சிறப்பாக இருக்க வேண்டும் என்று வழிபாடு நடத்த இருப்பதாக தேவாலயத்திற்கு வந்திருந்த கிறிஸ்தவர்கள் தெரிவித்தனர்.



சிறப்பு திருப்பலியில் கிறிஸ்தவர்கள் மட்டுமின்றி பிற மதங்களை சேர்ந்தவர்களும் கலந்து கொண்டனர். இந்த சிறப்பு பிரார்த்தனை நிகழ்வானது நள்ளிரவு ஒரு மணி வரை நடைபெற்றது.

இதேபோல் கோவை நகரில் உள்ள பெரும்பாலான தேவாலயங்களில் நள்ளிரவு சிறப்பு திருப்பலி நிகழ்வுகள் நடைபெற்றது. பொதுமக்கள் பாதுகாப்புக்காக ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி இரண்டாவது உலகளாவிய முன்னாள் மாணவர் சந்திப்பு சிறப்பாக நடைபெற்றது

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர் சங்கத்தின் இரண்டாவது உலகளாவிய முன்னாள் மாணவர் சந்திப்பு ஆனைக்கட்டியில...

கோவை கவுண்டம்பாளையத்தில் ரூ.9.90 கோடி மதிப்பீட்டில் பாரா ஒலிம்பிக் விளையாட்டு வளாகம் - மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கவுண்டம்பாளையம் ஜீவா நகரில் 110 ஏக்கரில் ரூ.9.90 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும் மா...

புதுமையான தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளால் ஐரோப்பாவை அசத்திய குமரகுரு மாணவர்கள்; 3 விருதுகள் வென்று சாதனை..!

இங்கிலாந்து, மொனாக்கோ மற்றும் நெதர்லாந்தில் நடைபெற்ற சர்வதேச தொழில்நுட்பம் மற்றும் நிலைத்தன்மை போட்டிகளில், கோவை குமரகுர...

பவானி பேரேஜ் துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) பராமரிப்பு பணி: 10 பகுதிகளுக்கு மின்தடை

பவானி பேரேஜ் துணை மின் நிலையத்தில் ஜூலை 14 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும்....

பெரியநாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) பராமரிப்பு பணி: 13 பகுதிகளில் மின்தடை

பெரியநாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். இ...

மாதம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) மின் பராமரிப்பு: 11 பகுதிகளில் மின்தடை

மாதம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை ஜூலை 14ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் ந...