பீளமேடு அருகே தனியார் நிறுவனம் ஆக்கிரமித்துள்ள நிலத்தை மீட்டு தரக்கோரி அருந்ததியர் இன மக்கள் ஆட்சியரிடம் மனு

கோவை பீளமேடு அடுத்த ஏடி காலனி அருந்ததியர் இன மக்கள், விசாகா ஸ்டீல் நிறுவனம் ஆக்கிரமித்துள்ள நிலத்தை மீட்டு, தங்களுக்கு வீடு மற்றும் கழிவறை உள்ளிட்டவற்றை கட்டித்தர வலியுறுத்தி ஆட்சியரிடம் மனு.



கோவை: கோவை மாவட்டம் பீளமேடு அடுத்த ஏடி காலனியில் வசிக்கும் அருந்ததியர் மக்கள் தங்களுக்கு சொந்தமான நிலத்தை தனியார் நிறுவனத்திடம் இருந்து மீட்டு தங்களுக்கு வீடு மற்றும் கழிவறைகளை கட்டி தர வலியுறுத்தி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.



மனு அளிக்க வந்த அருந்ததியர் இன மக்கள் தங்களது கோரிக்கையை வலியுறுத்தும் வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி கோரிக்கை முழக்கங்களை எழுப்பினர்.



இது குறித்து அவர்கள் கூறியதாவது, எங்களுக்கு சொந்தமான இடத்தை விசாகா ஸ்டீல் நிறுவனத்திடம் இருந்து மீட்டெடுக்க வேண்டும். வீடில்லா அருந்ததியர் இன மக்களுக்கு வீடு வழங்க வேண்டும்.

50 ஆண்டுகளுக்கும் மேலாக கழிவறை வசதி இல்லாமல் சிரமப்பட்டு வரும் எங்களுக்கு, PSG மருத்துவமனையின் மன்றம் அமைந்துள்ள அரசு புறம்போக்கு நிலத்தை மீட்டு அங்கு போர்க்கால அடிப்படையில் பொது கழிவறை அமைத்து கொடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.



கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அருந்ததியர் இன மக்கள் கோரிக்கைகளை முன் வைத்து பதாகைகளை ஏந்தி முழக்கங்களை எழுப்பியதால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.

Newsletter

தமிழ்நாடு நாள் விழா: கங்கா செவிலியர் கல்லூரியில் தமிழர் பாரம்பரியத்தைப் பறைசாற்றிய மாணவர்கள்.

கோவையிலுள்ள கங்கா செவிலியர் கல்லூரியில், மாணவர் செவிலியர் சங்கம் சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு தின விழாவில், தமிழர் பாரம்ப...

துடியலூர் தொப்பம்பட்டியில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு

கோவை துடியலூர் அருகே தொப்பம்பட்டி யமுனா நகரில் நேற்று இரவு இரண்டு வீடுகளில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 4 ஓட்டு வீடுகள் எ...

கோவை மாநகராட்சி வார்டு 22 திமுக கவுன்சிலர் கட்சியில் இருந்து விலகல்

திமுகவில் ஜனநாயகத்திற்கும் உழைப்பிற்கும் அங்கீகாரம் இல்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கோவை மாநகராட்சி 22-வது...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...