அன்னூர் தொழில் பூங்கா நிலம் கையகப்படுத்துவதில் பாஜக அரசியல் செய்வதாக கூறுவது தவறு - கோவை தெற்கு எம்.எல்.ஏ வானதி சீனிவாசன்

கோவை செட்டி வீதி அருகே திறந்தவெளி உடற்பயிற்சி நிலையத்தை திறந்து வைத்த வானதி சீனிவாசன், மக்கள் பிரச்சனை ஆயிரம் உள்ளது, பாஜக தலைவர் அண்ணாமலையின் வாட்ச், பேண்ட், ஷூ குறித்த கேள்விகள் தேவையற்றது என்றார்.



கோவை: கோவை மாவட்டம் செட்டி வீதி அருகே உள்ள பாலாஜி அவென்யூ பகுதியில் திறந்தவெளி உடற்பயிற்சி கூடத்தை பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும், கோவை தெற்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் இன்று திறந்து வைத்தார்.



இந்த நிகழ்வைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது,



இன்று தெற்கு தொகுதிக்கு உட்பட்ட செட்டி வீதி பகுதியில் உள்ள பாலாஜி அவென்யூவில் திறந்தவெளி உடற்பயிற்சி கூடம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. மாநில அரசின் சார்பில் இளைஞர்களுக்கு உடற்பயிற்சி கூடம் அமைத்து அவற்றை பராமரிப்பது குறைவாக உள்ளது.

கோவை மாநகர் முழுவதும் சாலைகள் மோசமாக உள்ளது. மக்கள் மற்றும் வணிகர்கள் அதிகம் பயன்படுத்தும் முக்கிய சாலைகளான சலிவன் வீதி, செட்டி வீதி மிக மோசமாக உள்ளது. இரண்டு மாதத்திற்கு முன்பு போட்ட தண்ணீர் பந்தல் சாலைகள் மழைக்குப் பின் மீண்டும் குண்டும் குழியுமாக மாறியுள்ளது.

கோவையில் சாலை பிரச்சினைகளுக்கு இன்னும் தீர்வு ஏற்படாததால், இன்னும் ஒரு வார காலத்திற்குள் பாஜக முன்னெடுக்க உள்ள போராட்டங்களை குறித்து பாஜக மாவட்ட தலைவர் மூலம் வெளியிடப்படும்.

அன்றாட வாழ்க்கையை பாதிக்கக்கூடிய குடிநீர், சாக்கடை, சாலை போன்ற பிரச்சினைகளால் கோவை மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் தூய்மை பணிகள் மற்றும் குடிநீர் வழங்குதல் முறையாக மேற்கொள்ளப்படுவதில்லை என்று பொதுமக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.

அரசாங்க ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு உரிய சம்பளம் கொடுக்காமல் ஏழை தொழிலாளர்களின் வயிற்றில் அடிக்கின்றனர். இதனால், துப்புரவு பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

அடுத்த வாரிசை முதல்வர் அழகு பார்க்கிறார். தன்னுடைய மகனை அமைச்சராக்கியதன் வாயிலாக குடும்பத்தின் கட்சியாக திமுக மாறியுள்ளது. ஜனநாயக அமைப்புகளில் குடும்ப அரசியலுக்கு இடமே இல்லை. மாநிலத்தின் வளர்ச்சிக்கு குடும்ப அரசியல் பாதகமானது.



பாஜக அமைச்சர்கள் கூட்டத்திற்கு, அவர்கள் குடும்பத்தைச் சேர்ந்த தங்கச்சி, பையன், பேரன்கள் எல்லாம் பங்கேற்பதில்லை. பாஜக ஜனநாயக ரீதியாக செயல்படுவதால், அனைத்து கட்சி உறுப்பினர்களுக்கும் பொறுப்புகள் மற்றும் பதவிகள் வழங்கப்படும்.

ஒரு காலத்தில் இளைஞர்களை ஈர்த்த கட்சியாக இருந்த திமுகவில், தற்போது புதியவர்களுக்கும் திறமைசாலிகளுக்கும் வாய்ப்புகள் இல்லை. ஆனால், பாஜக இளைஞர்களுக்கு நல்ல வாய்ப்பு கொடுக்கிறது.

இங்கு தீர்க்கப்பட வேண்டிய மக்கள் பிரச்சினைகள் 1000 உள்ளது போது, அண்ணாமலையின் வாட்ச், சட்டை, பேண்ட், ஷூ குறித்த கேள்விகள் தேவையற்றது.

எட்டு வழிச்சாலை உள்ளிட்டவற்றில் திமுக இரட்டை வேடம் போடுகிறது. அதேபோல், அன்னூர் விவசாயி பிரச்சனையில் மாநில தலைவர் அண்ணாமலை போராட்டம் நடத்தினார். விவசாயிகள் பிரச்சனைக்கு பாஜக எப்போதும் குரல் கொடுக்கும்.

அன்னூரில் தொழில் பூங்கா அமைக்க விவசாய நிலங்களை கையகப்படுத்தும் பிரச்சனையில், பாஜக அரசியல் செய்து வருவதாக கூறுவது தவறு. இதில், பாஜக எந்த அரசியலும் செய்யவில்லை. அன்னூர் விவகாரத்தில் விவசாயிகளுடன் அமைச்சர்கள் உட்கார்ந்து பேசிக் தெளிவுபடுத்த வேண்டும்.

கோவையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ஏழு குளங்கள் மேம்படுத்தப்பட்டு வரும் பணிகள் ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது. கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் இல்லாததால் குளங்களில் நேரடியாக கழிவுநீர் கலக்கிறது.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் தொழில்துறை கணிதம் குறித்த தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய அறிவியல் அகாடமியுடன் இணைந்து தொழில்துறை...

செல்லப்பம்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

செல்லப்பம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.206) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உய...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் மற்றும் வரத்து விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 16 நிலவரப்படி நீர்மட்டம் மற்றும் வரத்து விவரங்கள் வெளிய...