கோவையில் ரூ.94 லட்சம் மதிப்பிலான திட்டப்பணிகளை பூமி பூஜை செய்து தொடங்கி வைத்த மேயர் கல்பனா

கோவை தெற்கு மற்றும் மத்திய மண்டலங்களில் ரூ.94 லட்சம்‌ மதிப்பீட்டில்‌ நகர்நல மையம்‌ கூடுதல் கட்டிடம், வகுப்பறைகள்‌ மற்றும்‌ கழிவறைகள்‌ கட்டுமான பணிகளை மேயர் கல்பனா ஆனந்தகுமார் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.


கோவை: கோவை‌ மாநகராட்சி மத்திய மண்டலம்‌ வார்டு எண்‌.83க்கு உட்பட்ட சுங்கம்‌ நகர்நல மையத்தில்‌ பெங்களுரை சேர்ந்த HF Interior தொண்டு நிறுவனம்‌ நிதியிலிருந்து ரூ.44 லட்சம்‌ மதிப்பீட்டில்‌ மருத்துவமனையின்‌ கூடுதல்‌ கட்டிடங்கள்‌, குடிநீர் மற்றும்‌ கழிவறை வசதிகள்‌ உள்ளிட்ட கட்டுமான பணிகள் நடைபெறவுள்ளது‌.

தெற்கு மண்டலம்‌ வார்டு எண்‌.88க்குட்பட்ட குனியமுத்தூர்‌, ரைஸ்மில்‌ சாலையில்‌ உள்ள மாநகராட்சி தொடக்க பள்ளியில்‌ அமெரிக்காவில்‌ வசித்து வரும்‌ செந்தில்குமார்‌, ஹேமாகுமார்‌ ஆகியோர்‌ குடும்ப சார்பில்‌ 100 சதவீத பங்களிப்பாக நமக்கு நாமே திட்டத்தில்‌ ரூ.50 லட்சம்‌ மதிப்பீட்டில்‌ 5 கூடுதல்‌ வகுப்பறைகள்‌ மற்றும்‌ கழிவறைகள்‌ கட்டுமான பணிகள் நடைபெறவுள்ளது.



மொத்தம் ரூ.94 லட்சம்‌ மதிப்பீட்டிலான இந்த 2 கட்டுமான பணிகளுக்கான பூமி பூஜை விழா இன்று நடைபெற்றது. இந்த நிகழ்வியில் கோவை மாநகர மேயர் கல்பனா ஆனந்தகுமார்‌ பூமிபூஜை செய்து துவக்கி வைத்தார்‌.



இந்நிகழ்ச்சியில்‌ துணை மேயர்‌ ரா.வெற்றிசெல்வன்‌, மாநகராட்சி துணை ஆணையாளா்‌ மரு.மோ.ஷர்மிளா, மத்திய மண்டல தலைவா்‌ மீனாலோகு, மாமன்ற உறுப்பினர்கள்‌ செந்தில்குமார்‌, வி.சுமா, நகர்நல அலுவலர்‌ மரு.பிரதீப்,‌ வா.கிருஷ்ணகுமார்‌, உதவி ஆணையாளர்‌ மகேஷ் கனகராஜ்‌,

மத்திய மண்டல நகர்நல அலுவலா்‌ மரு.வசந்த்‌ திவாகர்‌, சுகாதார அலுவலர்‌ ராமச்சந்திரன்‌, உதவி பொறியாளர்‌ கனகராஜ்‌, சுகாதார ஆய்வாளர்‌ ஸ்ரீரங்கராஜ்‌ மற்றும்‌ மாநகராட்சி அலுவலர்கள்‌ உள்ளிட்டோர் உடனிருந்தனர்‌.

Newsletter

கே.ஜி.சாவடி பகுதியில் நாளை (15.07.2026) மின்தடை: மாதாந்திர பராமரிப்பு பணிகள்

மதுக்கரை தாலுக்கா கே.ஜி.சாவடி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை...

கீரணத்தம் பகுதியில் நாளை (15.07.2026) 8 மணி நேரம் மின்தடை

கீரணத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜூலை 15) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை...

விலாங்குறிச்சியில் நாளை (15.07.2026) மின் பராமரிப்பு பணி - 8 மணி நேரம் மின்தடை

விலாங்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தண்ண...

சைபர் கிரைம்: ஆன்லைனில் ஆபாச வீடியோ பார்த்ததாக மிரட்டி லட்சக்கணக்கில் மோசடி: 2 பேர் கைது

ஆபாச வீடியோ பார்த்ததாக கூறி போலீஸ் அதிகாரிகள் என மிரட்டி, வடமாநில வியாபாரிகளிடம் ஆன்லைன் மூலம் பணம் பறித்த வழக்கில் இருவ...

பருவத் தேர்வு கட்டணம் செலுத்தியும் அபராதம்: பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு எதிராக தொலைதூரக் கல்வி மாணவர்கள் குற்றச்சாட்டு

பருவத் தேர்வுக்கான கட்டணத்தை காலக்கெடுவுக்குள் செலுத்தியிருந்தும், தொழில்நுட்பக் கோளாறால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ப...

வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் கோவை விமான நிலையம் வந்தடைந்தன

வியட்நாம் படகு கவிழ்ப்பு விபத்தில் உயிரிழந்த 6 தமிழர்களில், திருச்சியைச் சேர்ந்த 3 பேரின் உடல்கள் கோவை சர்வதேச விமான நி...