சேலம் ரயில்நிலையத்தில் பயணிகள் உதவி மையம் திறப்பு

சேலம் ரயில் நிலையத்திற்கு வந்து போகும் பயணிகளுக்கு உதவ, சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் ஹரி சங்கர் வர்மா , சேலம் கோட்ட வணிக ஒருங்கிணைப்பு மேலாளர் விஜுவின் தலைமையில் உதவி வணிகமேலாளர்கள், பயணச்சீட்டு பரிசோதகர்கள், நிலைய மேலாளர்கள், நடைமேடை ஆய்வாளர்கள் கொண்ட குழுவை நியமித்துள்ளார். இந்த நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, சேலம் ரயில்நிலையத்தில் பயணிகள் உதவி மையங்கள் திறக்கப்பட்டுள்ளன.  



இந்த உதவி மையங்களில் பயணிகளுக்கு தேவையான ரயில்கள் மற்றும் நிலையத்தில் உள்ள வசதிகள் குறித்த தகவல், ரயில்பெட்டிகளின் பராமரிப்பு, கழிப்பறைகள் தூய்மை, உணவு வசதிகள், வீல்சேர் வசதி, போர்ட்டர் வசதி போன்ற அனைத்து உதவிகளும் உடன் வந்து நேரில் செய்து தரப்படும். இது தவிர பயணிகள் ரயில்கள் பற்றிய தகவல் அறிய, சேலம் ரயில் நிலைய நுழைவு வாயில் (சுரங்கப்பாதை இறங்கும் இடத்தின் அருகே) மற்றும் நடைமேடை எண்கள். 3 மற்றும் 4ல் (சுரங்கப்பாதை மேலேறும் இடத்தில்) அமைந்துள்ள இந்த மையங்களின் அருகே தொடுதிரை தகவல் வசதியும் செய்யப்பட்டுள்ளது. இது போன்ற பயணிகள் வசதி மையங்கள் விரைவில் சேலம் கோட்டத்தில் உள்ள முக்கிய ரயில்நிலையங்களுக்கு விரிவு படுத்தப்படும் என்று வர்மா தெரிவித்தார். 



Newsletter

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...

கோவையில் நாளை முதல் கோமாரி தடுப்பூசி முகாம் தொடக்கம் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 10 வரை கால் மற்றும் வாய் (கோமாரி) நோய் தடுப்பூசி முகாம் நடைபெறும். அனைத்த...