பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி கோவையில் 4,000 போலீசார் தீவிர கண்காணிப்பு..!

கோவை மாவட்டத்தில் அண்மையில் நிகழ்ந்த கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் காரணமாக பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு கடந்த ஆண்டை விட அதிகளவிலான போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.


கோவை: உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் இருந்த பாபர் மசூதி கடந்த 1992 ஆம் ஆண்டு டிசம்பர் 6ஆம் தேதி இடிக்கப்பட்டது. நாடு முழுவதும் இந்த சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது.



இந்நிலையில், பாபர் மசூதி இடிப்பு தினமான டிசம்பர் 6ஆம் தேதி அசம்பாவித சம்பவங்களை தடுக்கும் விதமாக நாடு முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் ஆண்டு தோறும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி, மக்கள் அதிகம் கூடும் இடங்களான பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், விமான நிலையங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்படுவது வழக்கம்.

இந்நிலையில் பாபர் மசூதி இடிப்பு தினம் இன்று அனுசரிக்கப்படுவதையொட்டி அசம்பாவிதங்களை தடுக்கும் விதமாக வழக்கத்தை விட தமிழகம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.

குறிப்பாக கோவையில் கடந்த மாதம் கார் வெடி வெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது, மற்றும் முக்கிய இடங்கள் ‘’ஹாட் லிஸ்ட்’’ பகுதியில் குறிப்பிடப்பட்டதை தொடர்ந்து கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இந்நிலையில், கோவை மாநகரில் 3 ஆயிரம் போலீசாரும், புறநகரில் 1,000 போலீசார் என மாவட்டம் முழுவதும் 4 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளான காந்திபுரம் கிராஸ்கட் ரோடு, டவுன்ஹால் மற்றும் கடைவீதி பகுதிகளிலும், உக்கடம், போத்தனூர், சுந்தராபுரம், உள்ளிட்ட கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வரும் போலீசார், அவ்வழியாக வரும் வாகனங்களை முழுமையான சோதனைக்கு பிறகே அனுமதிக்கின்றனர்.

இதேபோல் காந்திபுரம் மத்திய பேருந்து நிலையம், திருவள்ளுவர் பேருந்து நிலையம், புறநகர் பேருந்து நிலையம், சிங்காநல்லூர் பேருந்து நிலையம், உக்கடம் பேருந்து நிலையங்களிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் கோனியம்மன் கோவில், தண்டுமாரியம்மன் கோவில் உள்பட அனைத்து கோவில்கள், தேவாலயங்கள், மசூதிகள் முன்பும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. இது தவிர கோவை ரயில் நிலையத்திலும், விமான நிலையத்திலும் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.



மேலும் முக்கிய இடங்களில் வெடிகுண்டு நிபுணர்கள் மெட்டல் டிடெக்டர் கருவிகள் மூலம் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அதே சமயம் பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு இஸ்லாமிய அமைப்பினர் கோவை மாநகரில் 3 இடங்களில் ஆர்ப்பாட்டம் மேற்கொள்ள உள்ளனர்.

இதற்காக ஆர்ப்பாட்டம் நடைபெறும் இடங்களில் தகுந்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...