கோவை துடியலூர் காவல் நிலைய வளாகத்தில் இலவச கண் பரிசோதனை மற்றும் ஆயுர்வேத மருத்துவ முகாம்

கோவை துடியலூர் காவல் நிலைய வளாகத்தில் நடைபெற்ற இலவச கண் பரிசோதனை மற்றும் ஆயுர்வேத மருத்துவ முகாமில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று பயனடைந்தனர்.


கோவை: கோவை துடியலூர் காவல் நிலையம், ஜே.எம்.ஜே. ஹவுசிங் அறக்கட்டளை மற்றும் கோவை மத்திய அரிமா சங்கம் இணைந்து இலவச சர்க்கரை நோய் கண்டறிதல்,விழிப்புணர்வு முகாம், சர்க்கரைநோயாளிகளுக்கு கண் பரிசோதனை முகாம் மற்றும் ஆயுர்வேத மருத்துவ முகாம் துடியலூர் காவல் நிலைய வளாகத்தில் நடைபெற்றது.

பெரியநாயக்கன்பாளையம் துணை காவல் கண்காணிப்பாளர் நமச்சிவாயம் தலைமையில்நடைபெற்ற முகாமில் ல் சிறப்பு விருந்தினர்களாக கோவை மத்திய அரிமா சங்க மாவட்ட கவர்னர் ராம்குமார், முன்னாள் மாவட்ட நீதிபதி முகமது ஜியாபுதீன் பங்கேற்றனர்.

இம்முகாமில் 40 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு இலவசமாக சர்க்கரை நோய் கண்டறிதல் நடத்தப்பட்டது. மேலும் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களில் விழித்திரை பாதிக்கப்பட்டுள்ளதா என கண்டறியப்பட்டு இலவசமாக லேசர் சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுகிறது. முகாமில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று பயடைந்தனர்.

இந்நிகழ்ச்சியில் துடியலூர் காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில்போக்குவரத்தை சீர் செய்ய ஜே.எம்.ஜே. ஹவுசிங் நிறுவனம் சார்பில் அதன் மேலான் இயக்குநர் வில்சன் பி தாமஸ்பேரி கார்டுகளை துடியலூர் காவல் நிலைய ஆய்வாளர் ஞானசேகரனிடம் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் காவலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Newsletter

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...