கோவையில் செல்லாத 500, 1000 ரூபாயை மாற்றி தரக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த மூதாட்டி

கோவை உப்பிலிபாளையம் பகுதியை சேர்ந்த மாரியம்மாள் என்ற ஆதரவற்ற மூதாட்டி, 15 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பழைய செல்லாத 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை மாற்றி தரக்கோரி மாவட்ட ஆட்சியர் சமீரனிடம் மனு அளித்துள்ளார்.


கோவை: கோவை மாவட்டம் உப்பிலிபாளையம் பஜனை கோவில் வீதியை சேர்ந்தவர் மாரியம்மாள்(80). இவரது கணவர் சுந்தர்ராஜ் மற்றும் மகன் செந்தில்குமார் ஆகிய இருவரும் இறந்து விட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் மூதாட்டி மாரியம்மாள் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது வீட்டை முழுவதுமாக சுத்தம் செய்துள்ளார். அப்போது அவரது மகன் செந்தில் குமார் பயன்படுத்திய பை ஒன்று கிடைத்துள்ளது.

அதனைப் பார்த்தபோது அதில் பழைய செல்லாத 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் என மொத்தம் 15,000 ரூபாய் இருந்துள்ளது.



இதையடுத்து அந்த ரூபாய் நோட்டுகளுடன் ஆட்சியர் அலுவலகத்தில் வந்த மூதாட்டி மாரியம்மாள், ஆட்சியரிடம் அந்த ரூபாய் நோட்டுகளை மாற்றி தர வேண்டும் என வலியுறுத்தி மனு அளித்தார்.

Newsletter

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் செப். 24-ல் நேரடி மாணவர் சேர்க்கை

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் தனியார் இணைப்புக் கல்லூரிகளில் காலியாக உள்ள இளமறிவியல் இடங்களை நிரப்ப நேரடி மாணவர...

கோவை மாவட்ட சாலைகள் பாதுகாப்பு சங்கத்தின் 14-வது மகாசபைக் கூட்டம்

கோவை மாவட்ட சாலைகள் பாதுகாப்பு சங்கத்தின் 14-வது மகாசபைக் கூட்டம் கோவையில் நடைபெற்றது. சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், ப...

தேசிய அளவிலான சிறிய ரக ரேஸ் கார் பந்தயத்தில் கோவை ஈ.ஏ.எஸ்.ஏ., கல்லூரி மாணவர்கள் அணி இரண்டாமிடம்

கோவை நவக்கரையில் உள்ள ஈ.ஏ.எஸ்.ஏ., என்ஜினீயரிங் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மெக்கானிக்கல் என்ஜினீயரிங் இரண்டாமாண்டு மாண...

திருப்பூர் மாவட்ட அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் செப்டம்பர் 21ஆம் தேதி நிலவரப்படி 45.77 அடியாக உயர்ந்துள்ளது. 90 அடி க...

கோவையில் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் செப்டம்பர் 21 நிலவரப்படி ஆனைமலையை அடுத்த ஆழியாறு அணையில் நீர்மட்டம் 63.3 அடியாகவும், பொள்ளாச்சியை அடுத...

கோவை பீளமேடு கவுன்சிலர் பள்ளி உணவின் தரம் மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம், வார்டு எண் 27, பீளமேடு பகுதியில் செப்டம்பர் 21, 2026 அன்று வார்டு கவுன்சிலர் அம்பிகா தனப...