கோவை மாவட்டத்தில் 17 வட்டாட்சியர்கள் பணியிட மாற்றம் - ஆட்சியர் சமீரன் உத்தரவு…!

கோவை தெற்கு, அன்னூர் மதுக்கரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 17 வட்ட ஆட்சியர்களை பணியிட மாற்றம் செய்து மாவட்ட ஆட்சியர் சமீரன் உத்தரவிட்டுள்ளார்.


கோவை: கோவை மாவட்டத்தில் பணியாற்றி வரும் 17 வட்ட ஆட்சியர்கள் இடம் மாறுதல் செய்யப்பட்டு உள்ளதாக மாவட்ட ஆட்சியர் சமீரன் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் சமீரன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,நீதித்துறை பயிற்சி முடித்து வந்துள்ள கல்பனா அலமேலு கோவை தெற்கு வட்ட ஆட்சியராகநியமிக்கப்பட்டுள்ளார். முன்னதாக அந்த பணியில் இருந்த சரண்யா, கோவை வடக்கு குடிமை பொருள் தனி வட்ட ஆட்சியராகநியமிக்கப்பட்டுள்ளார்.

ஆனைமலை வட்ட ஆட்சியராக மாரீஸ்வரன் நியமிக்கப்பட்டுள்ளார். ஆனைமலை வட்ட ஆட்சியராக இருந்த பானுமதி, பொள்ளாச்சி சமூக பாதுகாப்புத் திட்ட வட்ட ஆட்சியராகநியமிக்கப்பட்டுள்ளார்.

நீதித்துறை பயிற்சி முடித்து வந்துள்ள முருகேசன் மதுக்கரை வட்ட ஆட்சியராகநியமிக்கப்பட்டுள்ளார். மதுக்கரை வட்ட ஆட்சியராகஇருந்த பர்சானா ஆதி திராவிடர் நலத்துறை நிலை எடுப்பு வட்ட ஆட்சியராகநியமிக்கப்பட்டுள்ளார்.

பாதுகாப்பு தொழில் பூங்கா நில எடுப்பு தனி வட்ட ஆட்சியராக நித்தியவள்ளி நியமிக்கப்பட்டுள்ளார்.வால்பாறை வட்ட ஆட்சியராக ஜோதிபாசு நியமிக்கப்பட்டுள்ளார். அந்த இடத்தில் பணியாற்றிய விஜயகுமார் பொள்ளாச்சி நகர நிலவரித் திட்ட தனி வட்ட ஆட்சியராகநியமிக்கப்பட்டுள்ளார்.

பொள்ளாச்சி நகர நிலவரித் திட்ட தனி வட்ட ஆட்சியர் ரமேஷ் குமார், தமிழ்நாடு மாநில வாணிபக் கழக கலால் மேற்பார்வை அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார். கோவை வடக்கில் கலால் மேற்பார்வை அலுவலராக இருந்த ரமேஷ் தெற்கு தாலுக்கா கலால் மேற்குப் பார்வையாளர் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பாதுகாப்பு தொழில் பூங்கா நில எடுப்பு தனி வட்ட ஆட்சியராக திரிபுரசுந்தரி நியமிக்கப்பட்டுள்ளார். அன்னூர் வட்ட ஆட்சியராக தங்கராஜ்நியமிக்கப்பட்டுள்ளார். அந்த இடத்தில் இருந்த சிவக்குமார் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணி டி.ஆர்.ஓ வின் நேர்முக உதவியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மதுக்கரை சமூக பாதுகாப்புத் திட்ட வட்ட ஆட்சியராக ரேணுகாதேவி நியமிக்கப்பட்டுள்ளார். கோவை வடக்கு கலால் மேற்பார்வை முன்னாள் அலுவலர் ஜெயசித்ரா சிப்காட் நில எடுப்பு தனி வட்ட ஆட்சியராகநியமிக்கப்பட்டுள்ளார். மேட்டுப்பாளையம் சமூகப் பாதுகாப்புத் திட்ட வட்ட ஆட்சியர் ரங்கராஜன், நகர நிலவரித் திட்ட தனி வட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு மாவட்ட ஆட்சியரின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது

Newsletter

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் செப். 24-ல் நேரடி மாணவர் சேர்க்கை

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் தனியார் இணைப்புக் கல்லூரிகளில் காலியாக உள்ள இளமறிவியல் இடங்களை நிரப்ப நேரடி மாணவர...

கோவை மாவட்ட சாலைகள் பாதுகாப்பு சங்கத்தின் 14-வது மகாசபைக் கூட்டம்

கோவை மாவட்ட சாலைகள் பாதுகாப்பு சங்கத்தின் 14-வது மகாசபைக் கூட்டம் கோவையில் நடைபெற்றது. சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், ப...

தேசிய அளவிலான சிறிய ரக ரேஸ் கார் பந்தயத்தில் கோவை ஈ.ஏ.எஸ்.ஏ., கல்லூரி மாணவர்கள் அணி இரண்டாமிடம்

கோவை நவக்கரையில் உள்ள ஈ.ஏ.எஸ்.ஏ., என்ஜினீயரிங் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மெக்கானிக்கல் என்ஜினீயரிங் இரண்டாமாண்டு மாண...

திருப்பூர் மாவட்ட அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் செப்டம்பர் 21ஆம் தேதி நிலவரப்படி 45.77 அடியாக உயர்ந்துள்ளது. 90 அடி க...

கோவையில் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் செப்டம்பர் 21 நிலவரப்படி ஆனைமலையை அடுத்த ஆழியாறு அணையில் நீர்மட்டம் 63.3 அடியாகவும், பொள்ளாச்சியை அடுத...

கோவை பீளமேடு கவுன்சிலர் பள்ளி உணவின் தரம் மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம், வார்டு எண் 27, பீளமேடு பகுதியில் செப்டம்பர் 21, 2026 அன்று வார்டு கவுன்சிலர் அம்பிகா தனப...