கோவையில் அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில் அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது

கோவையில் நடைபெற்ற அனைத்து கட்சி ஆலோசனை கூட்டத்தில் "பதட்டத்தை உருவாக்கும் நோக்கத்துடன் பந்த அறிவித்துள்ள அரசியல் கட்சிகள் (பா.ஜ.க) மறுபரீசிலனை செய்ய வேண்டும்” எம்பி நடராஜன் தெரிவித்தார்.


கோவை: அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் திமுக அலுவலகத்தில் இன்று அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், திமுகவைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள், எம்பி நடராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்திற்கு பின் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர் நடராஜன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-



காவல் துறையின் நடவடிக்கையை இந்த கூட்டம் வரவேற்கிறது.கோவையில் கார் வெடித்த சம்பவத்தில் இறந்தவர் NIA கட்டுப்பாட்டில் இருந்தார் என சொல்கிறீர்கள். அப்படியென்றால் இதை NIA தோல்வி என சம்பந்தபட்டவர்கள் சொல்வார்களா? ஆகவே NIA விசாரணையை இந்த கூட்டம் வரவேற்கின்றது.

கோவை மாவட்டத்தில் அமைதியை ஏற்படுத்துவதும் கோவை மாவட்ட மக்கள் மத்தியில் ஒரு பாதுகாப்பான தன்மையை உருவாக்குவதற்கும் தமிழ்நாடு அரசு எடுத்து வருகின்ற அனைத்து நடவடிக்கைகளையும் இந்த கூட்டம் வரவேற்கிறது.

இந்நேரத்தில் கோவை மாநகரில் பதட்டத்தை உருவாக்கும் நோக்கத்துடன் வரும் 31ஆம் தேதி பந்த அறிவித்துள்ள அரசியல் கட்சிகள் (பா.ஜ.க ) மறுபரீசிலனை செய்ய வேண்டும். போராட்டத்தை திரும்ப பெற்று அமைதியை நிலை நாட்ட வேண்டும் மத பதட்டத்தை தூண்டும் விதமான போராட்டம் கூடாது அரசின் நடவடிக்கைகளுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேட்டில் அங்கன்வாடி முதல் வாய்க்கால் தூர்வாரல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால், பீளமேடு பகுதியில் அங்கன்வாடி மையம், மரக்கிளை அகற்றும...

பொள்ளாச்சி அருகே ஹோட்டல் உரிமையாளர் வீட்டு முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

பொள்ளாச்சி அருகே வேட்டைக்காரன்புதூரில் பிரபல ஹோட்டல் உரிமையாளரின் வீட்டு முன்பு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தப்பிய...

அரசு பள்ளியில் தவெக கட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பு தவறான முன்னுதாரணம் - கோவையில் நயினார் நாகேந்திரன்

கரூர் மாவட்டத்தில் கோவில் நிலங்களுக்கு பட்டா வழங்கப்பட்ட விவகாரம் குறித்து முழுமையான ஆய்வுக்குப் பிறகு, கோவில் சொத்துகளை...

கோவை மாநகராட்சி தூய்மை பணியாளர் நேர்மையால் குப்பையில் கிடந்த 1.1/2 சவரன் தங்க நகை உரியவரிடம் ஒப்படைப்பு

கோவை மத்திய மண்டல வார்டு 68-ல் குப்பை சேகரிப்பு பணியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர் முருகன், குப்பையில் தவறுதலாக கிடந்த 1.1/...

கோவையில் கட்டுமான நிறுவனங்களுக்கு டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் கட்டாயம் - கோவை மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப. அறிவிப்பு: 100 வார்டுகளில் உள்ள கட்டுமான நிறுவனங்கள் மற்றும் தனியா...

அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 10ஆம் தேதி 48.07 அடியாக உயர்ந்துள்ளது. 90 அடி கொள்ளளவு கொண்...